தமிழ்நாடு வரைபடம்

தமிழ்நாடு வரைபடம்

Tamil Nadu Map in Tamil
* முக்கிய சாலைகள், ரெயில்வேஸ், நதிகள், தேசிய நெடுஞ்சாலைகள் முதலியவற்றுடன தமிழ்நாட்டின் வரைபடம்
தமிழ்நாட்டைப் பற்றி
நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு, இந்தியாவில் மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றும் முக்கிய மாநிலங்களில் ஒன்றாகும். ஆந்திர பிரதேசம் அதற்கு வடக்கு எல்லையாக உள்ளது, அதேசமயம் கர்நாடகா, கேரளா, முறையே, வடமேற்கு மற்றும் மேற்கில் உள்ளன. தெற்கு மற்றும் கிழக்கு பக்கங்களில மாநிலத்தைச் சூழ்ந்துள்ள இரண்டு நீர் நிலைகள் முறையே இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா ஆகியவையாகும். உண்மையில், வடிவியலில், தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் புறக்கோடியை தெற்கு முனையில் தொடுகிறது.இந்த மாநிலத்தின் மொத்த பரப்பளவு 1,30,058 சதுர கி.மீ. முன்பு மதராஸ் என்றழைக்கப்பட்ட சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாக சுமார் 175 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள இது தான் , தமிழக தலைநகர் ஆகும். நூற்றுக்கணக்கான தென்னை மரங்களுடன் அழகான கடற்கரை பகுதிகள், கம்பீரமான கோயில்கள், கலாச்சார மரபுகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் தமிழ்நாட்டை, சுற்றுலா பயணிகளின் ஒரு விருப்பமான இடமாக செய்துவிட்டன்.

தமிழ்நாட்டின் வரலாறு
முதலில் தமிழகம் என்று அறியப்பட்ட, தமிழ்நாடு, சுமார் 6000 ஆண்டுகள் பழமையான பண்டைய வரலாறு உள்ளது. மற்றும் திராவிடர்கள் தோன்றிய இடமாக அறியப்பட்டது. வரலாற்றாசிரியர்கள், புராதனம், நடுத்தரம் மற்றும் நவீனம் என்று மூன்று வெவ்வேறு பிரிவுகளாக தமிழக வரலாற்றைப் பிரிக்கின்றனர். அனைத்து நாகரிகங்களிலும் பழமையான ஒன்றாக இருந்து, வடக்கிலிருந்த ஆரியர்கள் காரணமாக, திராவிடர்கள் (அல்லது தமிழர்கள்) தெற்கு நோக்கி நகர்ந்து அங்கே தங்க வேண்டியிருந்தது என்று சிலர் சொல்லுகின்றனர். , சோழர்கள், பல்லவர்கள், பாண்டவர்களிலிருந்து தொடங்கி பல வம்சாவளியினர் இந்த மாநிலத்தை ஆட்சி புரிந்துள்ளனர். அவர்கள் புகழ்பெற்ற வரலாறு பண்டைய, இடைக்கால உட்பிரிவின் கீழ் வருகிறது. சோழ மன்னர்கள், அப்போதிருந்த அரசர்களுடன் பல போர்கள் மற்றும் மோதல்கள் மூலம் 4 வது நூற்றாண்டில் பல ஆண்டுகளாக ஆண்ட பின்னர், 9 ஆம் நூற்றாண்டு தங்கள் பேராண்மையை மீண்டும் கைப்பற்றினர். ஆனால் அவர்கள் 14 ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் சுல்தான்களால் படையெடுப்புக்கள் மூலம் தெற்கு இந்தியாவின் முக்கிய பகுதிகளில் கைப்பற்றப்பட்டு ஆட்கொள்ளப்பட்டனர்.

அரசு மற்றும் அரசியல்
அரசியல் என்று வரும்போது தமிழ்நாடு மிகவும் தீவிரமாக உள்ளது மற்றும் மாநிலம் முதலமைச்சரான், ஆளுநர் மற்றும் மற்ற அமைச்சர்களுடன் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து தேசிய கட்சிகளும் மாநிலத்தின் பல நடவடிக்கைகளில் ஒரு வலுவான பிடியை வைத்திருக்கின்றன. அதைத் தவிர, இந்த மாநிலத்தின் உள்ளே சுமூகமாக தனது அரசியல் விவ்காரங்களை நடத்தும் நிறைய பிராந்திய கட்சிகள் இருக்கின்றன. எனினும், இந்த மாநிலத்தின் முழு அரசியல் காட்சியும் மிகவும் சிக்கலானதாகவும் மற்றும் சவாலானதாகவும் இருக்கிறது. இது துடிப்பானதாக மற்றும் மாறுபட்டு இருக்கிறது, மற்றும் பல சந்தர்ப்பங்களில் நாட்டின் மத்திய அரசியல் எங்கிருக்கிறது என்பது குறித்தும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் 234 சட்டமன்ற தொகுதிகளௌம் சுமார் 40 பாராளுமன்ற தொகுதிகளும் இருக்கின்றன. காங்கிரஸ் மற்றும் பிஜேபி போன்ற தேசிய கட்சிகள் இருப்பதாலும், மற்றும் அவற்றின் வலுவான செல்வாக்காலும், அரசியல் அதிகாரம் மத்திய அரசில் மையப்படுத்தப்பட்ட உள்ளது.

புவியியல்
தமிழ்நாடு அதன் வடக்கே (கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம்) மற்றும் மேறகே (கேரளா) நிலப்பகுதிகள் அமையப் பெற்றுள்ளது அத்துடன் அதன் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முறையே இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடாவின் நீர் நிலைகளில் மூலம். சூழப்பட்டுள்ளது, அதன் வடக்கு, புறக்கோடியில்பழவேற்காடு ஏரி உள்ளது மற்றும் தெற்கு முனை கன்னியாகுமரி அல்லது கேப் காமரின் மூலம் உருவாகிறது. முதுமலை வனவிலங்கு சரணாலயம் மேற்கத்திய எல்லையாக உள்ளது மற்றும் கோடியக்கரை ,தமிழ்நாடு கிழக்கு எல்லையை உருவாக்குகிறது. கிழக்கு தொடர்ச்சி மலை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் மலைத்தொடர்கள் மாநில எல்லைகளுடன் சேர்த்து சென்று நீலகிரி மலைகளில் சந்திக்கின்றன.. மாநில பூகோளத்தை கட்டமைக்கும் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. மலைப்பகுதி அல்லது குறிஞ்சி, வறண்ட பகுதியில் அல்லது பாலை, மற்றும் வன பகுதி அல்லது முல்லை, கடலோரப் பகுதி அல்லது நெய்தல் மற்றும் வளமான சமவெளிகள் அல்லது மருதம்,. கர்நாடக மாநிலத்தில் உருவாகும் காவிரி நதி மாநிலத்தின் உயிர்நாடியாக ஆக தமிழ்நாட்டில் நுழைகிறது. இந்த ஆறு பசுமையான கோரமண்டல சமவெளிகளை வளமான செய்யும் பொறுப்பு உள்ளது மற்றும் இது தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினத்திலுள்ள் டெல்டாவை உருவாக்குகிறது

தமிழ்நாட்டின் சீதோஷ்ணநிலை
தமிழ்நாடு பருவ மழையை நம்பியே உள்ளது இது தவறினால் சில நேரங்களில் நாட்டில் வறட்சிக்கு வழிவகுக்கின்றன. வறண்ட அதன் காலநிலை துணை ஈரப்பதமான நிலையிலிருந்து வறண்ட நிலைக்கு வேறுபடுகிறது.தமிழ்நாட்டில் மூன்று வேறுபட்ட, தனித்துவமான மழை காலங்கள் உள்ளன, அதாவது கனரக தென்மேற்கு காற்றால் வகைப்படுத்தப்படும் தென்மேற்கு பருவமழை; ஜூன் முதல் செப்டம்பர் மாதங்கள் வரை; வடகிழக்கு காற்றால் வகைப்படுத்தப்படும் வடகிழக்கு மழை, அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்கள் வரை; மற்றும் ஜனவரி முதல் மே மாதம் வரை உலர் பருவம்.. மாநில ஆண்டு மழை சுமார் 945 மிமீ (37.2 இன்ச்) இதில் 32% தென்மேற்கு பருவமழை மற்றும் 48% வடகிழக்கு பருவமழை ஆகிறது.. மாநிலத்தை 7 வேளாண் காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கலாம்: வடக்கு-மேற்கு, வட்க்கு-கிழக்கு, தெற்கு, மேற்கு, அதிக உயரத்தில் மலைப்பாங்கான இடம், அதிக மழை, மற்றும் காவிரி டெல்டா.

மக்கள் தொகை புள்ளி விவரங்கள்:
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாரு, 7,21,47,030 மக்களை, ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு ஏற்புடைய விகிதத்துடன் கொண்டுள்ளது.. வளர்ச்சி விகிதங்கள், இருவருக்கும் 15.6% எல்லைக்குள் தேசிய அளவில் சராசரியாக இருக்கின்றன. இந்துக்கள், தமிழ் சமூகத்தின் ஒரு முக்கிய பகுதியை ஆக்கிரமிக்கின்றனர் மற்றும் அவர்கள் தனது சொந்த சமூக மற்றும் மத நம்பிக்கைகளின் தொகுபபுகளைக் கொண்ட பிராமணர்கள். அவர்கள் மத்தியில் நிறைவான ஒருங்கிணைப்பாக இடைக்கால மற்றும் ஒரு நவீன இந்து மதத்தை காணலாம் இது இந்துக்களின் பகுதியினர் மத்தியில் பரவலாக உள்ளது, அடுத்த வகையினராக முஸ்லிம்கள் அல்லது கிருஸ்துவர்கள் மக்கள் தொகை ஒரு ஏற்புடைய விகிதத்தில் அவர்களுக்கிடையே உள்ளது, எனினும் இது இந்துக்களை வி மிகவும் குறைவு. தலைநகர் மற்றும் அது போன்ற முக்கிய நகரங்களில் கட்டப்பட்டுள்ள பல மசூதிகள் மற்றும் தேவாலயங்கள், இந்த இரண்டு மதங்களும் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க இடங்களில் பெற்றுள்ளது என்று நிரூபித்துள்ளன. சில புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் மேலும் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். தமிழ் ஜெயினர்கள் அல்லது சமணர்கள், மாநில இலக்கியம் மற்றும் கட்டடிடக் கலையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளனர். பிற்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் மாநிலத்தில் தங்கியுள்ளனர் மற்றும் தங்களை இந்துக்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்கின்றனர். இருப்பினும், கணக்கெடுப்பின் படி, அவர்கள் இந்து ஜனத்தொகையில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை.

சமுதாயம், கலை மற்றும் பண்பாடு
தமிழக மக்கள் பெரும்பாலும், தளர்வான வாழ்க்கை வாழ்கிறார்கள். தமிழர்கள் மிகவும் ஆழமான ஆர்வத்தை இசை, ந்டனம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் பெற்றுள்ளனர்..பரதநாட்டியம் போன்ற நடன வடிவங்கள், கர்நாடக இசையும் சேர்த்து பல விதமான் இசை,பல நூற்றாண்டுகளாக இங்கே வளர்ந்தன. திருவிழாக்கள் இந்த பிராந்தியத்தில் ஒரு தினசரி அம்சம் ஆகும். நவராத்திரி அல்லது தசரா (செப்டம்பர்/அக்டோபர்) தீவாவளி (அக்டோபர்/நவமபர்) கார்த்திகை (நவம்பர்/டிசம்பர்) மற்றும் பொங்கல் (ஜனவரி) ஆகியவை பிரபலமானவை. கர்நாடக இசையின் ஒரு தனித்துவமான விழா, தியாகராஜர் விழா, ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாத்த்தில், பிரபல பாடகர் கவிஞர் தியாகராஜர் பிறந்த இடமான திருவையாறில் நடைபெறுகிறது. ஒரு மொத்த இணக்கம் மற்றும் தளக்கட்டுட்ன் கூடிய வெகுஜன செயல்திறன் உடைய அற்புத காட்சியைப் பார்க்க முடியும். கைவினைப்பொருட்களில் மரம், கல் மற்றும் உலோகத்தில் செய்த மிகவும் கடுஞ்சிக்கலான சிற்ப வடிவமைப்புகள் அடங்கும். நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட வெண்கல மற்றும் தஞ்சாவூர் தட்டு இங்கே சிறப்பு குறிப்புக்கு தகுதியானது.

மொழி
தமிழ் அதிகார பூர்வமான மற்றும் மாநிலத்தில் மிகவும் பரவலாக பேசப்படும் மொழியாகும்.இது தான் நாட்டில் செம்மொழியாக அங்கீகரிக்கப் பட்ட முதல் மொழியாகும். எனினும், சில் தென்னிந்திய மொழிகளும் பரவலாக தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள குடியிருக்கும் மக்களால் பேசப்படுகின்றன. இங்கே சில் தனித்துவமான இடங்களில, இந்த மொழிகள் உள்ளூர் மொழியை ஆக்கிரமிக்கின்றன. உதாரணமாக, இந்த மாநிலத்தின் வடமேற்கு பகுதிகளில் வசிப்பவர்கள், கர்நாடகத்திற்கு அருகில் இருப்பவை, தமிழில் பேசுவதை விட கன்னடத்தை விரும்பித் தேர்வு செய்கின்றனர்.. சேலம் மாவட்டம் தான் மிகப் பெரிய கன்னடம் பேசும் ஜனத்தொகை கொண்டதாகும். அதே போன்று கேரள எல்லைக்கருகில் வாழ்பவர்கள் மலையாளத்தில் தொடர்பு வைத்துக் கொள்வதையே விரும்புகின்றனர். மாநிலத்தின் பெரும் பகுதியில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்கள் அவர்களிடையே உருதுவில் தொடர்பு கொள்கின்றனர். தாய்நாட்டைச் சார்ந்த கிருஸ்துவர்கள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கிலத்தில் ஒட்டிக் கொண்டனர். தமிழ்நாடு மகத்தான தொழில்மயமாக்கல் மற்றும் முன்னேற்றத்துடன் உள்ள் ஒரு மாறுபட்ட மாநிலம் என்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இங்கே வ்ந்து வசிக்கிறார்கள் அதனால், மற்ற தென்னிந்திய மொழிகளல்லாத ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி, போஜ்புரி மற்றும் மராத்தி ஆகியவை பல்வேறு இனக் குழுக்களால் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ள மக்களால் உபயோகிக்கப் படுகின்றன. உறைக்கும் விதமாக, படித்த தமிழர்கள் மிகவும் ஒருவருக்கொருவர் தங்கள் மத்தியில் தொடர்பு கொள்ள ஆங்கிலத்தை விரும்புகின்றனர்.

தமிழ்நாட்டின் பண்டிகைகள்
தமிழ் நாடு மாநிலம் திராவிட பண்பாடு தோன்றிய இடமாகும். இந்த மாநிலத்திலுள்ள எல்லா கோவில்களும், நினைவுச் சின்னங்களும் திராவிட கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணங்களாகும். அது இந்தியாவின் இசை, கலை மற்றும் இலக்கியத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை செய்துள்ளது. மிகப் பிரபலமான நடன வடிவங்களில் ஒன்றான பரதநாட்டியம், இங்கே தான் தோன்றியது. ஆண்டு முழுவதும் நடக்கும் தமிழ்நாடு கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் உலகின் பல்வேறு மூலைகளிலும் இருந்து மில்லியன் பாதங்களை வரவழைக்கின்றன. மாநிலத்தில் அனைத்து கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் ஆடம்பரமாகவும், பெருமையுடனும்,.விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன.

கல்வி
தமிழ்நாடு நாட்டின் மிக உயர்ந்த கல்வியறிவு உடையவர்கள் கொண்ட இந்திய மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. அது ஆரம்பக் கல்வி மற்றும் மேல் முதன்மை நிலைகல்வி என்று வரும் போது, 100%GER பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ அத்துடன் தமிழ்நாடு மாநில குழுவுடன் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகள், உள்ளன. எனவே, ஒரு குழந்தைக்கு சாத்தியமான சிறந்த அடிப்படை கல்வி வழங்க, இந்த பள்ளிகள் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட அனைத்து அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கும் மொழியாகவுள்ள அதேசமயம்பெரும்பாலும், தனியார் பள்ளிகளில் ஆங்கிலத மொழி தேர்வு செய்யப்படுகின்றது., வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ள குழந்தைகளை பள்ளிக்கு கூட்டி வந்து அவர்களுக்கு ஆரம்பக் கல்வியை வழங்கும் பொருட்டு, மதிய வேளை உணவு, கணிணி கல்வி, பெண் குழந்தை கல்வி, இலவச பயண வசதி, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் போன்றவற்றை மாணவர்களுக்கு வழங்குதல் போன்ற புதுமையான திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. உயர் கல்வி என்று வரும் போது, மாநிலம் சுமார் 40 பல்கலைக்கழகங்கள் (அரசு மற்றும் தனியார்), 480 பொறியியல் கல்லூரிகள், 5000 மருத்துவக் கல்லூரிகள், 1100 கலைக் கல்லூரிகள் ஆகியவற்றை வாழ்க்கையில் மேலே உயர கனவு காண்பவர்களுக்காக பெற்றிருக்கிறது. தமிழ்நாடு டிப்ளமோ தொழில்நுட்ப கல்வி(TNDTE) டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் போன்றவற்ரை இலட்சியமுள்ள மாணவர்களுக்காக வழங்குகிறது.

பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு
தமிழ்நாடு, முற்போக்கான சீரான மற்றும் நம்பகமான பொருளாதாரத்தின் ஒரு மிகவும் பிரகாசமான படத்தை வெளிப்படுத்துகிறது. இங்கே வளர்ந்து வரும் தொழில்கள், நன்கு கட்டமைக்கப்பட்ட விவசாயத் துறை பிரிவுகள், மாநிலம் முழுவதற்கும் முற்றிலுமான பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க உதவி செய்யும் வங்கிகல் மற்றும் நிதி ஆகியவை உள்ளன. மாநிலம், நாட்டின் மற்ற பகுதிகளுடன் நன்றாக இணைக்கப் பட்டுள்ளதால் போக்குவரத்து ஒரு பிரச்சினை அல்ல, அது பல்வேறு துறைகளிலமக்களின் நன்மைக்காக, இங்கே பலவேறு தொழில்கள் எழ உதவுகிறது. இந்தியாவில், இந்த மாநிலம் மட்டுமே சக்தி மற்றும் ஆற்றலின் பரந்த ஒதுக்கீடு காரணமாக மின்சார உற்பத்தியில் உபரி. உள்ளது. தொடர்பு வசதி இங்கே நன்றாக உருவாக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாரு நாட்டின் மிகப் பெரிய தொழில்களுடைய மாநிலமாக இருப்பதற்கு, முக்கிய காரணமாக உள்ளது.

சுற்றுலா
இயற்கை அழகினால் ஆசிர்வதிக்கப் பட்ட தமிழ்நாடு, எல்லா விதத்திலும் பயணிகளின் மகிழ்ச்சியாகும். கவர்ச்சியான கடற்கரைகள், கம்பீரமான கோயில்கள், பல வரலாற்று நினைவு சின்னங்கள், மூச்சு வாங்கும் நீர்வீழ்ச்சிகள், அழகான தளங்கள் மற்றும் இயற்கை காட்சிகள் தமிழ்நாட்டை சிறந்த சுற்றுலா இடமாக்ச் செய்து உள்ளது. சென்னை, தலைநகரம், பண்டைய மற்றும் நவீன கலாச்சாரத்தின் ஒரு நிறைவான ஒருங்கிணைப்பை வெளிப்படுத்துகிறது, காஞ்சிபுரம், கிட்டத்தட்ட 1000 கோயில்களுடன் ஒரு யாத்ரீகத் தலமாக உள்ளது. அது பட்டுபுடவைகளுக்கும் புகழ் பெற்றது. ஏலகிரி, கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகியவை பயணிகளிடம் பரவலாக பிரசித்தி பெற்ற மலை வாழிடங்கள்.மூன்று கடல்கள், குறிப்பாக வங்காள் விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் கன்னியாகுமரி, இந்திய தீபகற்பத்தின் தெற்குகோடி ஆகியவை இணையும் இடத்தைப் பார்ர்க மக்கள் விரும்புகிறார்கள். இந்த புள்ளியிலிருந்து சூரிய உதயம் மற்றும் மறைவு ஆகியவை சொர்க்கம் போல் தோன்றும்.ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி கோவில், திருச்சிராப்பள்ளி, ராமநாதஸ்வாமி ஆகியவை அனேகமான மத பயணிகள் பார்க்கும் இடங்களாகும். அழகிய மெரினா கடற்கரை (12 கி.மீ நீளமுள்ள உலகத்தின் நீளமான கடற்கரை) கோவளம் கடற்கரை.

போக்குவரத்து
தமிழ்நாடு, அதன் புவியியல் ரீதியான இட அமைப்பு காரணமாக, பொருத்தமான மற்றும் நவீன உள்கட்டமைப்பு கொண்ட போக்குவரத்தை பொது அத்துடன் தனியார் வாகனங்களுடன் உருவாக்க முடிந்தது. அதன் அடர்ந்த மற்றும் விரிவான நெட்வொர்க்குகளால் அமைக்கப்பட்ட தேசிய, மாநில கிராமப்புற இணைப்பிகள் சாலைகள் நன்றாக பராமரிக்கப்பட்டு அரசாங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது., தெற்கு ரெயில்வே இந்த மாநிலத்தை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இணைக்கிறது. சென்னை சர்வதேச விமான நிலையம், சில பிரதான தேசிய மற்றும் சர்வதேச ஏர்வேஸ்கும் மையமாக இருக்கிறது. உலகத்தின் மற்ற பாகங்களுடன் இணைப்பை மேம்படுத்த மற்றும் 5 சரிவதேச, தேசிய விமானநிலையங்களும் உள்ளன. தமிழ்நாடு, பொருட்களை எந்த ஆபத்துகளும் இல்லாமல் பரிமாறிக் கொள்ள, நீர்வழிகளையும் பெற்றிருக்கிறது.. நகரத்திற்குள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (தமிழ்நாடு அரசுப்) துவக்க முயற்சிகளால், பயணிகள் எளிதாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய பல பேருந்துகள் மூலம் செல்ல முடியும்.சென்னை மெட்ரோ ரெயில்வே தினசரி பயணிகளுக்கு நிலைமைகளை மேலும் மேம்படுத்தியுள்ளது. உள்ளூர் பயணிகளுக்கு, டாக்சி, ஆட்டோ ரிக்ஷா, சைக்கிள் ரிக்ஷா மேலும் தனியார் கார்கள் போன்ற வாகனங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல இருக்கின்றன.

Last Updated on : October 28, 2014