ஆந்திர பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம் நாட்டின் தென் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள இந்தியாவின் ஒரு மாநிலம் ஆகும். இந்த மாநிலம், அழகிய ஓவியங்கள், கற்களளில் கைவினைப் பொருட்கள் செய்வது, பொம்மை தயாரித்தல் சிலைகள், செதுக்குவது, அழகிய ஓவியங்கள், யக்ஷகானம், உருமுலா நாட்டியம், காடோ நாட்டியம், போன்ற கிராமிய நடனங்கள், சங்கராந்தி, தசரா, வரலஷ்மி, தீபாவளி, நாகுல சவுதி போன்ற விழாக்கள் மற்றும் ஆட்டு, தோசை, உலவச்சாறு மற்றும் பாயாசம். போன்றவறிக்காக அறியப்படுகிறது
ஆந்திர பிரதேச வடபகுதி மலைத்தொடர்களாகும். மிகவும் உயரமான மஷேந்திரகிரி கடல் மட்டத்திற்கு மேல் 1,500 மீட்டர் உயரத்திலுள்ளது. பருவநிலை பொதுவாக வெப்பமாகவும் மற்றும் ஈரப்பதமானதாகவும் உள்ளது. ஆண்டு மழையலவு 125 செ,மீட்டர். இந்த் மாநிலத்தின் முக்கிய ஆறுகள் கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆகும்
ஆந்திரப் பிரதேசம் 175 தொகுதிகள் கொண்ட ஒரு ஒற்றை அறை சட்டமன்றமாகும். இது வரை, இந்த மாநிலம், இந்திய தேசிய பாராளுமன்றத்திற்கு 60 உறுப்பினைர்களையும், மாநிலங்களவைக்கு (மேல் சபைக்கு) 11 பேரையும், லோக்சபா (கீழ் சபைக்கு) 25 உறுப்பினர்களையும் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு “தெலிங்கானா” என்று அழைக்கப்படும் ஒரு மாநிலம் அதிலிருந்து செதுக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரப் பிரதேசம் மறுசீரமைப்புச் சட்டம், 2014 மசோதா பெப்ரவரி 2014 இல் தெலுங்கானா மாநில உருவாக்கம் ஆதரவாக நிறைவேற்றப்பட்டது, ,இதில் 10 மாவட்டங்கள் ஆந்திர பிரதேசத்தின் வடமேற்குப் பகுதியிலிருந்து அடங்கியுள்ளன. ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த மாநிலம் இந்தியாவின் 29 மாநிலமாக ஜூன் மாதம் 2ம் தேதி, 2014 லில் இருந்து நடைமுறைக்கு வந்தது. 10 வருடங்களுக்கு ஹைதராபாத் இரண்டு மாநிலங்களின் தலைநகரமாகவும் இருக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆந்திர அரசாங்கம், விஜயவாடா பகுதியில் அரசுக்கான ஒரு புதிய தலைநகரை முன்மொழிந்தது.
வரலாறு
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஆந்திர பிரதேசம் ஒரு முக்கியமான புத்த மையமாகவும் மற்றூம் மற்றும் பேரரசர் அசோகரின் பரந்த பேரரசின் ஒரு அங்கமாகவும் இருந்தது. ஆரம்ப கால பெளத்த செல்வாக்கின் தடயங்கள் மாநிலத்திலும் மற்றும் அதைச் சுற்றி பல இடங்களில் இன்னமும் தெரிவதில் ஆச்சரியமில்லை.பேரரசர் அசோகரின் இறப்பிற்குப் பிறகு, சட்டவஹனாக்கள் இந்த பிராந்தியத்தில் தமது சாம்ராஜ்ஜியத்தை நிறுவினர். 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய வரை, 7 ஆம் நூற்றாண்டில், சாளுக்கிய ஆதிக்கம் ஆந்திராவில் மேலாக நடைபெற்றது. 14 நூற்றாண்டில், முஸ்லிம் சக்தி இந்த மேற்கு மாநிலத்தை அடைந்தது, மற்றும் பல நூற்றாண்டுகளுக்கு இந்த சமஸ்தானத்தை ஆண்டுள்ளனர், மற்றும் இறுதியாக 1713 ல் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் இது எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆந்திராவின் புவியியல்
இந்த மாநிலம் இரண்டு முக்கிய நில பிரிவுகளினால் உருவாக்கப்பட்டது. இந்த மாநிலத்தின் கிழக்கு பகுதியை, தக்காண பீடபூமி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் உருவாக்குகின்றது. மாநிலத்தின் வடக்கு பகுதி தெலுங்கானா பகுதியால் உருவாக்கப்பட்டது, மாநிலத்தின் தெற்கு பகுதி ராயலசீமா என்று அடையாளம் காணப்படுகிறது. ராயலசீமா மற்றும் தெலிங்கானா பகுதிகள் கிருஷ்ணா நதியால் பிரிக்கப் ப்டுகிறது. தெலிங்கானா பகுதி ஒரு தனி மாநிலமாக ஆந்திர பிரதேச பிரிவிற்குப் பிறகு ஆக்கப்பட்டு தெலிங்கானா என்று பெயரிடப்படும்.
புள்ளிவிவரங்கள்:
ஆந்திரப் பிரதேசம் 13 மாவட்டங்களைக் கொண்டுள்ளது மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை அதன் மக்கள் தொகையை, 2011 கணக்கெடுப்பின் படி காட்டுகிறது.
ஆந்திராவின் மக்கள் தொகை 4,93,86,799. அதன் ஆண் மற்றும் பெண் ஜனத்தொகை முறையே 2,47,38,067 மற்றும் 2,46,48,731.இந்த மாநிலத்தின் மொத்த பரப்பு 160.205 சதுர கி.ஈ மற்றும் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிமீ க்கு 343 ஆகும். 2011 புள்ளி விவரங்களின் படி, ஆந்திர மாவட்டங்களில் மொத்தம் கல்வியறிவு சதவீதம் 67 ஆக உள்ளது.
பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு
விவசாயம், ஆந்திரப் பிரதேச பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறையாகும். சுமார் 70% மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர், மற்றும் இந்த மாநிலம் இந்தியாவின் முக்கிய அரிசி உற்பத்தி பகுதிகளில் ஒன்றாகும். முக்கிய பயிர்கள் நெல், மக்காச்சோளம், கம்பு, பருப்பு, ஆமணக்கு, புகையிலை, பருத்தி, கரும்பு, நிலக்கடலை மற்றும் வாழைப்பழங்கள் ஆகும். மாநிலத்தின் மூடப்பட்டிருக்கும் காட்டுப் பகுதி சுமார் 23% ஆகும், மற்றும் முக்கிய வன பொருட்களில் தேக்கு, யூகலிப்டஸ், முந்திரி, மூங்கில் மற்றும் மென்மையான மரம் ஆகியவை அடங்கும். மாநிலத்தின் முக்கிய தொழிற்துறைகளில் சில, இயந்திர கருவிகள், செயற்கை மருந்துகள், மருந்துகள், கனரக மின் இயந்திரங்கள், கப்பல்கள், உரங்கள், மின்னணு சாதனங்கள், வானூர்தி பாகங்கள், சிமெண்ட் மற்றும் சிமெண்ட் பொருட்கள், ரசாயனங்கள், கல்நார், கண்ணாடி மற்றும் கைக்கடிகாரங்கள்
போக்குவரத்து
இந்த மாநிலத்தில் பஸ் சேவை மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் நடத்தும் ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது பேருந்துகள் மாநிலம் முழுவதும் கிராமங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயலாக்க மற்றும் இணைப்பு வழங்கும் மிகவும் பெரிய சாலைகளின் பிணைப்பு இருப்பதால் செல்கின்றன. பல எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் வழங்குகிற ஒரு பரந்த ரயில் நெட்வொர்க் நாட்டின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியையும் மாநிலத்துடன் இணைக்கிறது மாநிலத்திலுள்ள விமானநிலையங்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச இடங்களுக்கு விமான சேவையை அளிக்கின்றன. இணைப்புகளை மேம்படுத்துவதற்காக, அரசு மேலும் நிறைய விமானநிலயங்களை அவைக்க திட்டமிட்டு வருகிறது. வர்த்தகத்திற்க்கு பயனுள்ளதாக இருக்கும் சில துறைமுகங்கள் மாநிலத்தில் உள்ளன.
சமூகம், கலை மற்றும் கலாச்சாரம்
85% சதவீதத்திற்கு மேற்பட்டோர் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு பேசுகிறார்கள். மிகவும் தென் பாகத்தில் தமிழி பரவலாகப் பேசப்படுகிறது மற்றும் கர்நாடக எல்லையில் சில கானரீஸ் அல்லது கன்னடா பேசுபவர்கள் இருக்கிறார்கள். ஹைத்ராபாத்தில் நிறைய உருது பேசுபவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் 7% சதவிகிகம் மாநிலத்தின் ஜனத்தொகை ஆவர்
மாநிலத்தில் தசரா, தீபாவஆளி, ஸ்ரீ ராமநவமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, விநாயக சவுதி (கணேஷ் சதுர்த்தி) மற்றும் மஹா சிவராத்திரி போன்ற விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. அதே போல், பக்ரீத், ஈத்-உல்-பிட் போன்ற முஸ்லிம் விழாக்கள், கிறிஸ்துமஸ், ஈஸ்டர் மற்றும் புது வருடப் பிறப்பு போன்ற கிருத்துவப் பண்டிகைகளௌம் கேளிக்கையாகக் கொண்டாடப்படுகின்றன..ஆனால் உகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு) சங்கராந்தி, தசரா மற்றும் விநாயக சவுதி போன்ற கொண்டாட்டங்கள் இந்த் மாநிலத்தில் தனித்தன்மை வாய்ந்தவை.
மொழி
தெலுங்கு ஆந்திர உத்தியோகபூர்வ மொழியாகும் இது “தெனுகு” என்றும் முன்பு அழைக்கப்பட்டது. உருது பரவலாகப் பேசப்படும் இரண்டாவது மொழியாகும் அதனால் இது ஆந்திராவின் இணை உத்தியோகபூர்வ மொழியாகும்.ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாரா ஆகியவை மாநிலத்தில் பேசப்படும் மற்ற முக்கிய மொழிகளாகும். தெலுங்கு உலகின் 15வது பரவலாக பேசப்படும் மொழியின் இடத்தில் உள்ளது, மற்றும் இந்தியாவில் ஹிந்திக்குப் பிறகு இரண்டாவது இடத்திலுள்ளது. சமஸ்கிருத மொழியின் பாதிப்பினால, இது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. தமிழ், ஒரியா மற்றும் கன்னடமும் மாநிலத்தின் சில பகுதிகளில் பேசப் படுகின்றன.
ஆந்திராவின் சுற்றுலாத்தலங்கள்
ஆந்திரப் பிரதேசம் வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் பல புண்ணியத் தலங்கள் நிறைந்தது. இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள மூலவர் வெங்கடேஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். பிரதான் கோவில் திருமலை மலை மேல் அழைந்துள்ளது. மற்றும் தென்னிந்திய கட்டிடக்கலையில் ஒரு தலை சிறந்த படைப்பாகும். முக்கிய சுற்றுலா ஈர்ப்பு இடம் ஹைதராபாத், மாநிலத்தின் தலைநகரமாகும். தலைநகர் உண்மையில், ஹுசைன் சாகர் ஏரி மூலம் ஒன்றாக இணைக்கப்பட்ட. ஹைதெராபாத் மற்றும் செகந்தராபாத்தில் இரட்டை நகரங்களாகும். முக்கியமான பார்க்க வேண்டிய இடங்கள் 1591ல் கட்டப்பட்ட சார்மினார், உஸ்மேனிய பலகலைக்கழகம், மாநில அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம், சுகாதாரம் மியூசியம், பொது பூங்கா, பிர்லா மந்திர் மற்றும் மெக்கா மஸ்ஜித் போன்றவை..
அரசு மற்றும் அரசியல்
ஆந்திரப் பிரதேசத்தில் 175 விதான் சபா இடங்கள் மற்றும் விதான் பரிஷத்தில் 75 உறுப்பினர்கள் உள்ளன. ஆந்திர பிரதேசத்திலிருந்து 11 உறுப்பினர்கள் ராஜ்ய சபையிலும், 25 உறுப்பினர்கள் லோக் சபாவிலும் இருக்கின்றன.தற்போது 13 மாவட்டங்கள் ஆந்திரப் பிரதேசத்திலுள்ளன. நிறைய அரசுகள் ஆந்திரப் பிரதேசத்தை ஆட்சி புரிந்துள்ளன. இந்திய தேசிய காங்கிரஸ் 1982 வரை இந்த மாநிலத்தை ஆண்டது. என்.சந்திரபாபு நாயுடு, மாநிலத்தின் இப்போதைய முதல்வராவார். நாயுடு நீண்ட காலத்திற்கு இந்த மாநிலத்தை ஆன்ட முதல்வர் என்ற பதிவைப் பெற்றுள்ளார். அதாவது 1995 முதல் 2004 வரை. நீலம் சஞ்சீவ ரெட்டி இந்த மாநிலத்தின் முதல் முதல் மந்திரியாவார் அவர் பின்பு இந்தியாவின் ஜனாதிபதியானார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி(TRS), தெலுகு தேசம் கட்சி(TDP)இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற நிறைய அரசியல் கட்சிகள் உள்ளன.ஆனால் தற்போது தெலுகு தேசம் கட்சி தான் மாநிலத்தை ஆட்சி புரிகிறது.
கல்வி
2011 கணக்கெடுப்பின் படி ஆந்திரப் பிரதேசத்தின் கல்வியறிவு 67.4%. மாநிலத்தில் நிறைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. மாநிலத்தில் பள்ளிகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அல்லது ICSE அல்லது மாநில குழுவுடன் இணைந்தவை. ஆந்திராவில், பல பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உட்பட பல உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மனிதநேயம், , பொறியியல், சட்டம், வணிக முதலியன தொழில்முறை துறைகளில் கல்வி வழங்குகின்றன,. தேசிய அணு ஆராய்ச்சி அமைப்பு மற்றும் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளிகள் போன்ற முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்கள் அரசாங்கத்தால் அமைக்க அமைக்கப் பட்டுள்ளன
Last Updated on : May 23, 2015