தெலுங்கானா வரைபடம்

Telangana Map in Tamil

தெலுங்கானா வரைபடம்
* தெலுங்கானா மாநில வரைபடம்
தெலுங்கானாவைப் பற்றி:
தெலுங்கானா, 2014 ஜூன் 2 ம் தேதி இந்தியாவின் 29 வது மாநிலமாக ஆனது. இது முன்பு ஆந்திரப் பிரதேசம் என்று அறியப்பட்ட மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.இந்தியா சுதந்திர நாடாக ஆவதற்கு முன்னால், இது, இரண்டு \ப்ரிவுகளடங்கிய, குறிப்பாக வாரங்கல் மற்றும் மேடக்,ஹைதிராபாத் மாநிலத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.அந்த சமயத்தில் இந்தப் பகுதி நிகாம்களால் ஆளப்பட்டது. இப்பகுதி, சமீபத்திய செய்திகளில் ஆந்திர பிரதேச முன்னாள் மாநிலம் மற்றும் தேசிய நிர்வாகம் இடையே சச்சரவு மையப் புள்ளியாக இடம் பெற்றாது – மத்திய அரசு புதிய மாநிலத்தை தோற்றுவிக்க ஒப்புக் கொண்ட போதும் – ஆந்திர பிரதேசம் அதை பிராந்திய ஒருமைப்பாடு அடிப்படையில் எதிர்த்தது. 2011 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்தப் பகுதி 3,52,86,757 ஜனத்தொகையைக் கொண்டுள்ளது, இது ஆந்திர பிரதேசத்தின் 41.6% ஆக உள்ளது.

தெலிங்கானா மாநிலம் உருவாக்க வரலாறு:
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஒரு தனியான தெலிங்கானா மாநிலத்தை உருவாக்குவதற்கான இயக்கம் நெடுநாட்களுக்கு முன்பே தோன்றியது. அங்கு பல இயக்கங்கள், நடந்தன ஆனால், மிக முக்கியமானவை 1969, 1972 மற்றும் 2009 ம் ஆண்டுகளில் நடந்தது.ஆண்டுகள் செல்லச் செல்ல, இந்த இயக்கம் நிறைய சக்தியைப் சேகரித்தது.

.2009 டிசம்பர் 9 ம் தேதி, இந்திய அரசின் ஒரு முறையான அறிவிப்புடன் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவது பற்றிய செயல்முறை ஆரம்பிக்கப்பட்டது.எனினும் இந்த தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதி, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் ராஜிநாமாவை, அளித்தனர்.

இந்த அறிவிற்புக்குப் பின்னர், இந்தப் பகுதிகளில் சில வன்முறை எதிர்ப்புகளும் காணப்பட்டன. இவைகளின் விளைவாக, இந்திய அரசு, 23 டிசம்பர் 2009 அன்று செயல்முறையைக் கைவிட வேண்டிய கட்டாயத்தில் வைக்கப்பட்டது. எனினும், தெலுங்கானா இயக்கம், ஹைதிராபாத்திலும் மறறும் இந்த பகுதியின் மற்ற மாவட்டங்களிலும் க்டுமையாகத் தொடரப்பட்டது.

இருப்பினும், காங்கிரஸ் கட்சி, தெலுங்கானா புதிய மாநிலம் உருவாக்க இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்க முடிவு எடுத்த போது இந்த, செயல்முறை 2013 ஜூலை 30 ம் தேதி மீண்டும் தொடங்கியது அடுத்த 10 வருடங்களுக்கு ஹைதராபாத் தெலுங்கான மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் கூட்டு தலைநகரமாக விளங்கும் என்று தீர்மானிக்கப் பட்டது. இந்த செயல்முறை 3ம் தேதி அக்டோபர் 2013 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றது.

அமைச்சர்கள் குழு (அமைச்சர்கள் குழு) வரைவு மசோதா, 2013 டிசம்பர் 5 ம் தேதி இந்திய அரசின் ஒப்புதல் பெற்றது, அதைத் தொடர்ந்து இந்த மசோதா, இரு அவைகளிலும், இதைப் பற்றி வாக்களிக்க முடியும் என்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 18த் தேதி, பிப்ரவரி 2014 அன்று 15 வது லோக்சபா, ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தது, மற்றும் ராஜ்ய சபா அதை 20ம் தேதி பிப்ரவர் 2014, தொடர்ந்தது.

திரு.பிரணாப் முகர்ஜி, இந்திய ஜனாதிபதி, இந்தத் தீர்மானத்திற்கான தனது ஒப்புதலை மார்ச் 1, 2014 அளித்தார், மற்றும் இதைப் பற்றிய அரசிதழ் அறிவித்தல், அன்றைய தினமே வெளியிடப்பட்டது. மார்ச் 4, 2014 அன்று இந்திய அரசினால் தெலுங்கான மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, என்வே 2ம் தேதி ஜீன் 2014 அன்று அது உருவாக்கப்பட்டது.

தெலுங்கானாவின் புவியியல் :
எல்லைகள்:. தெலுங்கானா மாநிலம், வடமேற்கு மற்றும் வடக்கு திசைகளில். மகாராஷ்டிராவால சூழப்பட்டுள்ளது.மேறகுப் பகுதியை கர்நாடகம் சுற்றி வளைக்கிறது, மற்றும் சட்டிஸ்கர் வடகிழக்கு திசையில் உள்ளது. தெலுங்கானாவிற்க்கு கிழக்கே ஒரிசா உள்ளது.

பரப்பளவு மொத்தமாக, இந்தப் பகுதி 1,14,840 கி.மீ பரப்பளவு கொண்டது. இது 44,340 சதுர மைல்களுக்குச் சமமாகும். s.

ஆறுகள்: இந்த மாகாணத்தில் மிக முக்கியமான ஆறுகள் முசி, கிருஷ்ணா, மஞ்சிரா மற்றும் கோதாவரி.

நகரங்கள்: தெலுங்கானாவின் பெரிய நகரங்கள் ஹைதராபாத், நிஜாமாபாத், வாரங்கல் மற்றும் கரீம்நகராகும்

தெலுங்கானா உருவாக்குவதைப் பற்றி அறிவிப்பு வந்ததிலிருந்து, நிறைய கண்டனங்கள், பல்வேறு ஆந்திரபிரதேச அரசியல்வாதிகளிடமிருந்து எழுந்தன. எனினும், பிப்ரவர் 13,2014 12.00 ம்ணிக்கு சபாநாயகர் மீராகுமார் இந்த மசோதாவை அறிமுகப்படுத்த அனுமதி அளித்த போது ஒரு முக்கிய சம்பவம் இடம் பெற்றது.நிறைய முழக்கங்கள் கத்தப் பட்டன. இந்த சமயத்தில் தான்,, அப்போதைய விஜயவாடா தொகுதி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் லகடபதி ராஜகோபால் மிளகும் பொடியை உபயோகித்தார். பின்னர் அவர், மற்ற மாநிலங்களின் பாராளு மன்ற உறுப்பினர்கள் தன் மீது தாக்குதல் நடத்திய போது, தற்காப்புக்காகவே அதைப் பயன் படுத்தியதாகத் தெரிவித்தார். அவரது செயல்கள் நிறைய இடையூறுகளை லோக்சபாவின் செயல்பாடுகளில் ஏற்படுத்தின மற்றும் பாராளுமன்ற கீழ்சபை உறுப்பினர்கள் சில பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது.

மக்கள் தொகை புள்ளி விவரங்கள்:
தெலுங்கானாவில் 10 மாவட்டங்கள் உள்ளன மற்றும் கீழ்வரும் அட்டவணை முறையே அங்கெயுள்ள மக்கன் தொகையை, 2011 கணக்கெடுப்பின் படி காண்பிக்கிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தெலுங்கானாவின் மக்கள் தொகை 3.51,95,978ல் நிற்கிறது. ஆண் மற்றும் பெண்கல் தொகை முறையே 1, 77, 04,078 and மற்றும் 2, 46, 48,731 இந்த மாநிலம் மொத்தம் 1.33,103 சதுர கி,.மீட்டர்கள் கொண்டது மக்கள் அடர்த்தி ஒரு சதுர கி,மீட்டருக்கு 296. மேலும் கல்வியறிவு விகிதம் ஆந்திரா மாவட்டங்களில் 66%

பொருளாதாரம்:
விவசாயம், தெலுங்கானாவின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகும். பருத்தி, மாந்தோப்பு மற்றும் புகையிலை போன்ற பயிர்கள் உள்ளூரில் மாநிலத்தில் வளர்க்கப்படுகின்றன. இரண்டு முக்கியமான ஆறுகளான கிருஷ்ணா மற்றும் கோதாவரியும் விவசாய வததிகளை இந்த மாநிலத்தில் அளிக்கின்றன. நிதி ஆண்டு 2012-13ல் தெலுங்கானா மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ 1,96,182 கோடியாக இருந்தது. நாகார்ஜுன் சாகர் அணை, கோதாவரி நதி பேசின் பாசன திட்டங்கள் இம்மாநிலத்திலுள்ள பல மாநில நீர்ப்பாசனத் திட்டங்களாகும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு, தெலுங்கானா இந்திய மாநிலங்களில் . தகவல் தொழில்நுட்பம் ஏற்றுமதி செய்வதில் மிகவும் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகும்.சிங்கேனி நிலக்கரி சுரங்களில் உள்ள நிலக்கரி வளம் முன்னிலையில், தெலுங்கானா ஒரு கனிம வளம் நிறைந்த மாநிலமாகக் கருதப்படுகிறது. நிதி ஆண்டு 2012-13-ஆம் விவசாயத்திற்கு மற்றும் சார்ந்த தொழில்களின் தொகை உள்நாட்டு உற்பத்தி ரூ 27.450 கோடி, மற்றும் தொழில்துறை ரூ,54,687 கோடியாக இருந்தது.

போக்குவரத்துt:
தெலுங்கானாவில் பஸ் சேவை மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் நடத்தும் ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகம் (APSRTC) மூலம் நிர்வகிக்கப்படுகிறது பேருந்துகள் மாநிலம் முழுவதும் கிராமங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயலாக்க மற்றும் இணைப்பு வழங்கும் மிகவும் பெரிய சாலைகளின் பிணைப்பு இருப்பதால் செல்கின்றன. இந்த மாநிலம் தென்மத்திய ரெயில்வேயின் கீழ் வருகிறது. தென்மத்திய ரெயில்வேயின் இரண்டு முக்கிய பிரிவுகளான செகந்திராபாதி மற்றும் ஹைத்ராபாத், இந்த மாநிலத்தில் வருகிறது. மிகவும் நாட்டில் மிக பரபரப்பான விமான நிலையமான. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் தான் இந்த மாநிலத்தின் மிகப் பெரிய விமான நிலையமாகும்.அரசு கொத்தகூடம் மற்றும் கரீம்நகர் போன்ற இடங்களில் புதிய விமான நிலையங்களைக் கட்டவும் தற்போதிருக்கும் ராமகுண்டம் விமானநிலையம், நிஜாமாபாத் மற்றும் வாராங்கல் விமான நிலையங்களை மேம்படுத்தவும் திட்டம் வைத்துள்ளது.

சமூகம் மற்றும் கலாச்சாரம்
மாநில மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் தெலுங்கு பேசுகின்றனர். மாநிலத்தின் சில பகுதிகளில் உருதும் பரவலாகப் பேசப்படுகிறது, மாநில கலாச்சாரம் முகலாயர்கள் மற்றும் நிஜாம்களின் காலத்தில் பதிக்கப்பட்ட பாரசீகர்களின் வழக்கங்களின் கலவையை சேர்த்து, உருவானது. இந்த மாநிலத்தில் தீபாவளி, ஸ்ரீராம நவமி, கணேஷ சதுர்த்தி, மஹா சிவராத்திரி போன்ற நிறைய இந்துப் பண்டிகைகளும், பக்ரா-ஈத் ம்ற்றும் ஈத்-உல்-பிட்ர் போன்ற முஸ்லிம் பண்டிகைகளும் கொண்டாடப் படுகின்றன. பட்டாவ்கம்மா மற்றும் லஷ்கர் பொனாலு ஆகியவை தெலுங்கானா மாநிலத்தின் விழாக்களாகும்.

மொழி:
சில மக்கள் தெலுங்கானா தெலுங்கு ஆந்திரப் பிரதேசத்தில் பேசப்படும் பொது தெலுங்கை விட வித்தியாசமாக உள்ளது என்று கூறினாலும் தெலுங்கு தான் தெலுங்கானாவின் உத்தியோகபூர்வ மொழியாகும்..தெலுங்கு மொழியில் சமஸ்கிருதம், உருது மற்றும் ஆங்கிலச் மொழிச் சொற்கள் அடங்கியுள்ளன.1948ககு முன்பு உருது தான் ஹைதராபாத்தின் உத்தியோக பூர்வ மொழியாக இருந்தாலும், ஹைதராபாத் மாநிலம் இந்தியக் குடியரசுடன் இணைந்த பின், அது அரசின் உத்தியோக பூர்வ மொழியாக ஆனது. தெலுங்கும் அரசின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவிப்பு மொழியாக உள்ளது.

அரசு மற்றும் அரசியல் :
தெலுங்கானா மற்ற மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற அமைப்பு போன்றே ஆளப்படுகிறது. இந்த அமைப்பு மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரம் மாநில முதலமைச்சரின் தலைமையில் உள்ள மந்திரிகள் குழுவிடம் தான் உள்ளது. மாநில சட்ட சபையில் சட்டமன்ற 119 உறுப்பினர்கள் மற்றும் மேலவையில் 40 உறுப்பினர்களும் உள்ளனர். கீழ் நீதிமன்றங்கள் மற்றும் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தின் அமைப்பு தெலுங்கானா நீதித்துறை அமைப்பை கவனித்துக் கொள்கிறது. இந்த மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகள், தெலுகு தேசம் கட்சி (TDP), தெலுங்கான ராஷ்டிர சமிதி (TRS) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ்(INC). பிப்ரவரி 2014ல, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், மசோதா பாராளுமன்றத்தால், வடக்கிலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரை 10 மாவட்டங்கள் அடங்கிய தெலுங்கானா தேசத்தை தோற்றுவிப்பதற்க்காக நிறைவேற்றப்பட்ட போது, தெலுங்கானா தொடங்கியது. அதிகாரபூர்வமான தெலுங்கானா 2, ஜூன் 2014ல் தோன்றியது.

கல்வி:
பல தனியார் மற்றும் பொது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் தவிர, மாநிலத்தின் பல உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. பள்ளிகள் மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அல்லது (ஐசிஎஸ்இ) மாநில குழு கல்வியுடன் இணைந்துள்ளது, அறிவியல், கலை, மனிதநேயம், சட்டம், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில், தொழில்முறை கல்வியை வழங்குகின்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஹைதராபாததிலுள்ள தகவல் தொழில்நுட்ப சர்வதேச நிறுவனம், (IIIT) வாரங்கலிலுள்ள தொழில்நுட்ப மற்றும் தேசிய நிறுவனம் (NIT), ஆகியவை மாநிலத்தில் முக்கியமான கல்வி நிறுவனங்களாக உள்ளன. எலெக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், மற்றும் ஹதராபாதிலுள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் மாநிலத்திலுள்ள சில புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களாகும்

அது ஏன் தெலிங்கானா என்று அழைக்கப்பட்டது?
தெலிங்கானா என்ற பெயர் மற்றும் இந்த மாநிலத்தின் சுற்று வழக்கிலுள்ள மொழி இரண்டும் திரிலிங்கா அல்லது திரிலிங்க தேசம், மூன்று லிங்கங்களின் நாடு என்று பொருள் படும் பெயரிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. இந்து மதம் புராணத்தின் படி, சிவன், லிங்கமாக காளிஸ்வரம் தக்ஷரராம மற்றும் ஸ்ரீசைலம் என்ற மூன்று மலைகள் மேலே இறங்கினார். இந்த மலைகள் அடிப்படையில் இந்தப் பகுதியின் எல்லைகளாக செயல்பட்டன மற்றும் இவை ஆறுகள் கோதாவரி மற்றும் கிருஷ்ணா இடையே எங்கோ அமைந்து இருக்க வேண்டும். இந்த சொல் மராத்தி மேலாட்சியில் இருந்து தெலுகு- பேசும் பகுதியைப் பிரிக்கவும் மற்றும் ஹைதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியாக அதை உருவாக்கும் பொருட்டும் பயன்படுத்தப்படுகிறது.

தெலுங்கானா ஏன் உருவாக்கப் பட்டது?
தெலுங்கானா ஆதரவாளர்கள், அத்தகைய ஒரு புதிய நாட்டை உருவாக்கும் அடிப்படை காரணங்களாக நீர் வளங்கள் விநியோகம், வேலைகள் மற்றும் வரவு செலவு திட்டம் ஆகிய பல பகுதிகளில் உள்ள முரண்பாடுகள் மற்றும் இழப்புகளைக் குறிப்பிடுகிறார்கள்.இந்தப் பகுதி ஆந்திர பிரதேசத்தில் உருவாக்கப்படும் வருவாயில் சுமார் 621% பங்கு அளித்து வந்துள்ளது. கோதாவரி மற்றும் கிருஷ்ணா நீர்பிடிப்பு பகுதிகளில் கிட்டத்தட்ட 69% அதற்கு இருந்தும் கூட, அதற்கு பல்வேறு பாசன திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நன்மை மட்டுமே சுமார் 19% அது கோதாவரி மற்றும் கிருஷ்ணா வலியுறுத்தினார் நீர்பிடிப்பு பகுதிகளில் கிட்டத்தட்ட 69% என்று கூட, அது பல்வேறு பாசன திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நன்மை மட்டுமே சுமார் 19% பெற்று வந்தது என்று கூறப்பட்டது. பெரும்பாலான ஆண்டுகளில், மாநில அரசு தெலுங்கானா வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை செலவழிக்கவில்லை என்றும் கூறப்படடது.

பேராசிரியர் ஜெயசங்கர், அரசு ஊழியர்கள் 20% மட்டுமே இந்தப் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளார். தலைமை செயலகத்தைப் பொறுத்த வரை, இந்த எண்ணிக்கை 10% மட்டுமே உள்ளது மற்றும், பல்வேறு துறைகளை தலமை தாங்கும் அதிகாரிகள் எண்ணிக்கை, தெலிங்கானாவிலிருந்து வெறும் 5% மட்டுமே. அவர், மாநில 50 ஆண்டுகள் இருப்பில், தெலுங்கானாவில் இருந்து முதல்-மந்திரிகள், ஆறு அரை ஆண்டுகள் மட்டுமே பணியாற்றினர் என்றும் சுட்டிக்காட்டினார்.

தெலுங்கானா ஆதரவாளர்கள் மாநில சட்டமன்றம் மற்றும் மக்களவையும் கூட பல்வேறு ஒப்பந்தங்கள், வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றத் தவறி விட்டது, மற்றும் இது இந்த மாநிலத்தை புறக்கணிப்பு, பின்தங்கியநிலை மற்றும் சுரண்டலில் விட்டு விட்டது என்று சுட்டிக்காட்டினர்.

தெலுங்கானாவை உருவாக்குவதில் உள்ள முரண்பாடு மற்றும் ஆட்சேபனை
தெலுங்கானா உருவாக்குவதைப் பற்றி அறிவிப்பு வந்ததிலிருந்து, நிறைய கண்டனங்கள், பல்வேறு ஆந்திரபிரதேச அரசியல்வாதிகளிடமிருந்து எழுந்தன. எனினும், பிப்ரவர் 13,2014 12.00 ம்ணிக்கு சபாநாயகர் மீராகுமார் இந்த மசோதாவை அறிமுகப்படுத்த அனுமதி அளித்த போது ஒரு முக்கிய சம்பவம் இடம் பெற்றது.நிறைய முழக்கங்கள் கத்தப் பட்டன. இந்த சமயத்தில் தான்,, அப்போதைய விஜயவாடா தொகுதி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் லகடபதி ராஜகோபால் மிளகும் பொடியை உபயோகித்தார். பின்னர் அவர், மற்ற மாநிலங்களின் பாராளு மன்ற உறுப்பினர்கள் தன் மீது தாக்குதல் நடத்திய போது, தற்காப்புக்காகவே அதைப் பயன் படுத்தியதாகத் தெரிவித்தார். அவரது செயல்கள் நிறைய இடையூறுகளை லோக்சபாவின் செயல்பாடுகளில் ஏற்படுத்தின மற்றும் பாராளுமன்ற கீழ்சபை உறுப்பினர்கள் சில பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது.

பல ஆந்திர பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் செயல்களுக்காக மக்களவையிலிருந்து இடைநீக்கத்தை எதிர் கொண்டனர். அவர்கள்:

இந்திய தேசிய காங்கிரஸ்
  • சாபம் ஹரி
  • ஏ.சாய் பிரதாப்
  • அனந்த வெங்கடராமி ரெட்டி
  • சுரேஷ் குமார் ஷேகர்
  • ராயபதி சாம்பசிவ ராவ்
  • கே.ஆர்.ஜீ. ரெட்டி
  • எஸ்.பி.வை.ரெட்டி
  • பாபி ராஜு கனுமுரி
  • எம்.ஸ்ரீனிவாசுலு ரெட்டி
  • ஜீ.சுக்கேந்தர் ரெட்டி
  • வீ.அருணா குமார்

தெலுகு தேசம் கட்சி
  • நிரமல்லி சிவபிரசாத்
  • கே.நாராயண ராவி
  • நிம்மலா கிரிஷ்டப்பா

வைஎஸார் காங்கிரஸ்
  • எம்.ராஜமோகன் ரெட்டி
  • வை.ஜகன்மோகன் ரெட்டி

கூடுதலாக, சட்டமன்ற மற்றும் ஆந்திரப் பிரதேச சபையும் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014 எதிர்த்துள்ளன.இதற்கு எதிராக 9 மனுக்கள் உயர் நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தெலுங்கானா உருவாக்கத்தின் விளைவுகள்:
அரசியல் நிபுணர்களின் படி, தெலுங்கானா உருவாக்கத்தினால பல்வேறு விளைவுகள் இருக்க முடியும். இந்த முடிவிற்கான ஆதரவாளர்களின் முக்கிய வாதம், தெலுங்கானா போன்ற சிறிய மாநிலம் நிர்வகிப்பதறகு எளிதாக இருக்கும் என்பது தான்.எனினும் ஜார்கண்ட் அதன் உருவாக்கத்திலிருந்து நிர்வக்கிக்கப் படும் முறையிலிருந்து, இந்த வாதத்திற்கு ஆதாரம் இல்லை. மேலும் தெலுங்கானா உருவாககம், கோர்காலாந்து, விதர்ப்பா மற்றும் போடோலாந்து போன்ற இயக்கங்களுக்கு வழி வகுத்து இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு வழி செய்யும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. .

Last Updated on : May 23, 2015