ராஜஸ்தான் வரைபடம்

Rajasthan Map in Tamil

ராஜஸ்தான் வரைபடம்
* முக்கிய சாலைகள், ரெயில்வேஸ், நதிகள், தேசிய நெடுஞ்சாலைகள் முதலியவற்றுடன் ராஜஸ்தான் வரைபடம்.
ராஜஸ்தான் பற்றி
ராஜஸ்தான் துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அதன் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் பாக்கிஸ்தானாலும், அதன் வடக்கு வடகிழக்கு பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களாலும், அதன் கிழக்கு மற்றும் தென் கிழக்கு உத்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தாலும், மற்றும் அதன் வடமேற்கு குஜறாத் மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. கடக ரேகை, பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள அதன் தெற்கு முனை வழியாக செல்கிறது. இந்த மாநிலம் 3,42,230 சதுர கி.மீட்டர்கள் பரப்பளவுள்ளது. அதன் தலைநகரம் ஜெய்பூர்.

ராஜஸ்தானின் புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலை
மேற்கு ராஜஸ்தான் ஒப்பீட்டில் வறண்ட மற்றும் செழிப்பற்ற நிலமாகும் : இந்த பகுதியில் பெரும் இந்திய பாலைவனம் என அழைக்கப்படும் தார் பாலைவனத்தின் பாகங்கள், சில அடங்கும். இந்த மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில், நிலம், ஈரமாக,மலைப்பாங்காக, மேலும் வளமானதாக உள்ளது. காலநிலை ராஜஸ்தான் முழுவதும் வேறுபடுகிறது. சராசரியாக, குளிர்காலத்தில் வெப்பநிலை 8 ° முதல் 28 ° C (46 ° 82 ° F) வரையும், மற்றும் கோடை வெப்பம் 25° முதல் 46° C (115 ° F முதல் 77 °).வரை உள்ளது. சராசரி மழைப்பொழிவும் மாறுபடும் ;மாநிலத்தில் ஜூலையிலிருந்து செம்டம்பர் வரை இந்த மழை மொழிகிறது. மேற்கு பாலைவனங்கள், ஆண்டுதோறும் சுமார் 100 மி.மீ. (சுமார் 4 அங்குலம்) குவிக்கின்றன தென்கிழக்கு பகுதியில் பருவக் காலங்களில் 650 மிமீ ஆண்டுதோறும் (26 அங்குலம்) பெறுகிறது..

ராஜஸ்தானின் வரலாறு
தொல்லியல் மற்றும் வரலாற்று சான்றுகள் 100,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் பகுதியில் ஒரு தொடர்ச்சியான மனித வாழ்விடம் இருந்ததைக் காட்டுகிறது. 7 மற்றும் 11 ஆம் நூற்றாண்டில் இடையே, பல வம்சாவளியினர் தோன்றினர், 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராஜ்புத் வலிமை உச்ச நிலையினை அடைந்தது. பேரரசர் அக்பர் ராஜ்புத் நாடுகளை முகலாயப் பேரரசுடன் கொண்டு வந்தார்; 19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அவர்கள் மராட்டியத்துடன் அதை சேர்த்தனர். முகலாயர்கள் சரிவு காரணமாக, ராஜபுத்திரர்கள் படிப்படியாக கண்கவர் தொடர் வெற்றிகள் மூலம் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெற்றனர், ஆனால் அதற்குள் அவர்கள் பிரிட்டிஷார் வடிவில் தோன்யிய ஒரு காட்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெரும்பாலான ராஜ்புதன மாநிலங்கள், ஒவ்வொன்றும் அதன் சொந்த அரசர்களுடன், ,அவற்றை சுயாதீன மாநிலங்களாக தொடர்ந்து இருக்க, சில பொருளாதார மற்றும் அரசியல் கட்டுப்பாடுகளை உட்பட்டு. அனுமதித்த பிரிட்டிஷ் கூட்டணிகளுள், நுழைந்தது, இந்த கூட்டணிகள் ராஜபுத்ரர்களின் இறுதிக்கு ஆரம்பாக இருப்பதி நிருபித்தன, மற்றும் விரைவில் ஆட்சியாளர்களின் ஊதாரித்தனம் மற்றும் அநுபவித்தல் ராஜ்புத் அரசாட்சியின் சிதைவிற்கு வழிவகுத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு தற்போதைய வடிவ ராஜஸ்தான் வந்தது..

ராஜஸ்தானின் மக்கள்தொகை புள்ளிவிவரம்
ராஜஸ்தான், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,85,48,437 மக்கள் தொகையை கொண்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், மக்கள் தொகை வளர்ச்சி 21.44% சுற்றி வருகிறது. ராஜஸ்தான், பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 926 ஆகிறது. மாநிலத்தில் கல்வியறிவு விகிதம் 67,06% ஆகும். ராஜஸ்தானிலுள்ள பெரிய நகரங்கள் ஜெய்பூர், ஜோத்பூர் மற்றும் கோடா. ராஜஸதான் மாநிலம் 33 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

ராஜஸ்தானின் அரசு மற்றும் அரசியல்
ராஜஸ்தான், 200 தொகுதிகளுடன் ஒரு ஒற்றை-அறை சட்டமன்ற அறை உள்ளது மாநிலம் 35 உறுப்பினர்களை இந்திய பாராளமன்றத்திகு அனுப்புகிறது 10 ராஜயசபை (மேலவை) மற்றும் 25 பேரை மக்களவைக்கும் (கீழ் அவை) அனுப்புகிறது. உள்ளூராட்சி அரசாங்கம் 30 நிர்வாக மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டது அரசியலில், ராஜஸ்தான், இரண்டு முக்கிய கட்சிகளால் ஆதிக்கம் செய்யப் படுகிறது : பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ்(ஐஎன்சி)

ராஜஸதானின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு
ராஜஸ்தானின் முக்கிய பொருளாதாரம் விவசாயமாகும் ; கம்பு, கோதுமை, மக்காச்சோளம் (சோளம்), மற்றும் பருத்தி வளர்க்கப்படுகின்றன. மாநிலத்தின் பல இடங்கள் மிகவும் வறண்டு, மற்றும் தார் பாலைவனத்தினால மூடப்பட்டிருக்கின்றன என்றாலும், மாநிலத்தின் மொத்த பயிரிடத்தக்க பகுதி 27,465 ஆயிரம் ஹெக்டேர்கள், மற்றும் பயிரிடும் பரப்பளவு, 20,167 ஆயிரம் ஹெக்டேர்கள். சுற்றுலாவும் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.

முதன்மையாக ஒரு விவசாய மற்றும் இடையர்கள் வாழ்க்கை பொருளாதாரம் இருந்தாலும் ராஜஸ்தான் நல்ல கனிம வளம் இருப்புகள் உள்ளது.இந்த மாநிலம் இந்தியாவின் மொத்த துத்தநாக அடர் வெளியீடுக்கு ஆதாரமாக இருப்பதுடன் மேலும் மரகதங்கள் மற்றும் கார்னடஸ், ஜிப்சம், வெள்ளி தாது, கல்நார், பெல்ட்ஸ்பார் மற்றும் மைக்காவைத் தயாரிக்கிறது. இது நிறைந்த உப்பு வைப்புகளை சம்பார் மற்றும் பிற இடங்களிலும் ம்ற்றும் செம்பு சுரங்கங்களை கேத்ரி மற்றும் தாரிபாவிலும் பெற்றுள்ளது. வெள்ளை பளிங்கு ஜோத்பூர் அருகே மார்க்கானாவில் வெட்டியெடுக்கப்படுகிறது. முக்கிய தொழில்கள்: ஜவுளி, விரிப்புகள் மற்றும் கம்பளி பொருட்கள், காய்கறி எண்ணெய்கள் மற்றும் சாயங்களாகும். கனரக தொழிற்சாலைகள், ரயில்வே உருட்டுதல் பங்கு, செம்பு மற்றும் துத்தநாக உருக்கு கட்டுமான ஆகியவை அடங்கும். இரசாயன தொழில் மேலும், காஸ்டிக் சோடா, கால்சியம் கார்பைடு மற்றும் கந்தக அமிலம், உரம், பூச்சிமருந்துலளைத் தயாரிக்கிறது. முக்கிய தொழில்துறை வளாகங்கள் ஜெய்ப்பூர், கோட்டா, உதய்பூர் மற்றும் பீல்வாராவில் உள்ளன.

நிறைய ஏக்கர் வறண்ட நிலங்கள் கொண்ட ராஜஸ்தானுக்கு விரிவான பாசன வசதி தேவைப் படுகிறது. அது நீரை பஞ்சாப் நதிகளிலிருந்தும் மற்றும் மேற்கு யமுனா(ஹரியானா) மற்றும் ஆக்ரா கால்வாய்கள் (உத்திரபிரதேசம்_ மற்றும் சபர்மதி மற்றும் நர்மதா சாகர் திட்டங்களிலிருந்து தெற்கேயிருந்தும் பெறுகிறது. அங்கு ஆயிரக்கணக்கான தொட்டிகள் (குட்டை அல்லது ஏரிகள்) உள்ளன, ஆனால் அவை வறட்சி மற்றும் வண்டல் மண்ணால் பாதிக்கப்படுகின்றன..ராஜஸ்தான், பக்ரா ந்ங்கல் திட்டத்த்டை பஞ்சாபுடனும் மற்றும் சம்பல் பள்ளத்தாகு திட்டத்தை மத்திய பிரதேசத்துடனும் பகிர்ந்து கொள்கிறது ; இரண்டும் பாசனத்திற்க்கும் குடிநீருக்காக தண்ணிரை வழங்கவும் பயன்படுத்தப் படுகின்றன.,மறைந்த பிரதமர் இந்திரா காநிதியின் நினைவாக 1980களின் நடுவில் இந்திரா காந்தி கால்வாய் என்று மறுபெயரிடப்பட்ட ராஜஸ்தான் கால்வாய், 400 மைல் வடமேற்கு மற்றும் மேற்கு ராஜஸ்தான் பாலைவனத்தில் நிலத்தில் பாசனத்திற்கு பஞ்சாபில் பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆறுகளில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்கிறது.

ராஜஸ்தானின் சமூகம் மற்றும் கலாச்சாரம்
மக்கள் தொகையில் ஒரு சிறிய சதவீதத்தை குறிக்கும் ராஜ்புத்திரர்கள் ராஜஸ்தான் மக்கள் தொகையில் மிக முக்கியமான பகுதி ஆகும். அவர்கள் தங்கள் போர்க்குணமுள்ள புகழ் மற்றும் அவர்களது வம்சாவழியைப் பற்றி பெருமை. கொள்கிறார்கள்.பிராமண வர்க்கத்தினர் பல கோத்ராங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளனர் அதே சமயம் மஹாஜன்(வர்த்தக பிரிவு)பல குழப்பமடைய வைக்கும் எண்ணற்ற் குழுக்களாக்க பிரிக்கப் பட்டுள்ளனர், இதில் சில குழுக்கள் ஜெயினர்கள் மற்றவர்கள் இந்துக்கள். வடக்கு மற்றும் மேற்கே, ஜாட்கள் மற்றும் குஜ்ஜார் விவசாய சமூகங்களுக்கு மத்தியில் பெரிய அளவில் உள்ளனர்.

ஆழ்வார், ஜெபுபூரி, பரத்பூரி மற்றும் தோல்பூர் பகுதியிலுள்ள பூர்விக குடிமக்கள் மினாஸ்(மேவாடிஸ்) பயணம் செய்யும் வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்கள், பஞ்ஜாராஸ், காடியா லோஹார்ஸ், செய்ய மற்றும் விவசாய மற்றும் வீட்டு செயற்படுத்துபவைகளை சரி செய்யும் மற்றொரு ஊரூராய் செல்லும் பழங்குடிகள், ஆகியோர் அடங்குவர்..இந்தியாவிலுள்ள மிகவும் பழமையான மக்கள், பில்ஸ், பில்வாரா, சிட்டவுகர் பன்ஸ்வாரா, உதய்பூர் சிரோஹி மாவட்டங்களில் குடியிருக்கிறார்கள் மற்றும் வில்வித்தையில் அவர்களின் திறன் பிரபலமானது.மேவார் பகுதில் கிராசியஸ் மற்றும் நாடோரி கதொதிஸ் வாழ்கிறார்கள். கோட்டா பகுதியில் சகாரியார்களும், மற்றும் மார்வார் பகுதியின் ராபரிசும் கால்நடை வளர்ப்பவர்கள்..

ராஜஸ்தானின் விழாக்கள்/பண்டிகைகள்
வசந்த விழா கங்காவுர், மார்ச் இறுதியில் இருந்து ஆரம்ப ஏப்ரல் வரையும் மற்றும் தீஜ் திருவிழா ஆகஸ்ட் மாத ஆரம்ப மற்றும் இறுதி இடையே ராஜஸ்தானில் முக்கியமானது. தீஜ், பருவமழையை வரவேற்கிற போது,. மாநிலத்தின் பல ஏரிகள் முழுவதும் நிறையும். நவம்பர் நடுப்பகுதியின் போது புஷ்கர் ஒட்டகம் மற்றும் கால்நடை கண்காட்சி, ஜனவரி இறுதியிலிருந்து ஆரம்ப பிப்ரவரி போது நாகவ்ர் திருவிழா. மற்றும் தாமதமாக நவம்பர் நடுப்பகுதியில் இருந்து இறுதி வரை பிகானீரில் நடைபெறும் கூல்யாட் கண்காட்சி ஆகியவை நன்றாக அறியப்பட்ட கண்காட்சிகளாகும். பிப்ரவரி ஆரம்பத்திலிருந்து நடுப்பகுதி வ்ரை நடைபெறும் பாலைவன விழா பிரபலமான நவீன கண்காட்சியாகும்.

ராஜஸ்தானின் மொழி
மாநில முதன்மை மொழி டிங்காலிலொருந்து பெறப்பட்ட இந்தோ-ஆரிய வட்டார மொழிகளில் ஒரு குழுவான, ராஜஸ்தானியாகும்., ஒரு நாக்கு இதில் பாணர்கள ஒரு காலத்தில் தங்கள் எஜமான்களின் புகழை பாடினார். முக்கிய நான்கு வட்டார மொழிகள் மார்வாரி (மேற்கு ராஜஸ்தானில்), ஜெய்புரி அல்லது துந்தாரி (கிழக்கு மற்றும் தென் கிழக்கில்) மால்வி (தென் கிழக்கில்) மற்றும் ஆழ்வாரில், மேவாடி, இந்த மொழியின் நிழல்கள் பரத்பூர் மாவட்டத்தின் பிரஜ் பாஷாவில் உள்ளன நவீன கல்வி பரவலினால் ராஜஸ்தானி மொழியின் உபயோகம் குறைந்து அதன் இடம் ஹிந்தியான எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது (ராஜஸ்தானின் அதிகாரபூர்வ மொழி).

ராஜஸ்தானின் கல்வி
சமீபத்திய ஆண்டுகளில், ராஜஸ்தான் மாநிலம், கல்வி பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைச் செய்துள்ளது 2011 கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் கல்வியறிவு விகிதன் 67.06% பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில பாடசாலை மட்டத்தில் கல்வி இரண்டாம் நிலை கல்வி, ராஜஸ்தான் (BSER) அல்லது மத்திய கல்வி வாரியம் (CBSE) தேர்வு வாரியத்துடன் இணைந்த ஒன்றாக இருக்கிறது. மாநிலத்தில் 9 பல்கலைக்கழகங்கள், 250 கல்லூரிகளுடன் உள்ளது. சுமார் 23 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்கள் (ITI) உள்ளன. மாநிலத்தில் மூன்று முக்கிய மற்றும் பிரபலமான கல்வி நிறுவனங்கள் உள்ளன - ஐஐடி, ஜோத்பூர், பிர்லா தொழில்நுட்ப கழகம் மற்றும் அறிவியல், பிலானி, ஐ.ஐ.எம் உதய்பூர்.

ராஜஸ்தானிலுள்ள மதம்
இந்து மதம், பெரும்பாலானர்களின் மதம், பொதுவாக பிரம்மா, சிவன், சக்தி, விஷ்ணு (விஸ்ணுவைப்), மற்றும் பிற தெய்வங்கள் மற்றும் வழிபாட்டின் மூலம், நடைமுறையில் உள்ளது. நாத்வாரா, கிருஷ்ணாவைப் பின்பற்றும் வல்லபாச்சாரிய பிரிவினரின் ஒரு முக்கியமான வழிபாட்டுத்தலமாகும்., நவீன இந்து மதத்தின் ஒரு சீர்திருத்தப் பிரிவான, ஆர்ய சமாஜ், அதே போல் அந்த மதத்தின் மற்ற வடிவங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர். சமண மதமும் மிக முக்கியம்; அது ராஜஸ்தானை ஆளபவர்களின் மதமாக இல்லை, ஆனால் ஆனால் வர்த்தகம் மற்றும் சமூகத்தின் பணக்கார பிரிவினரில் இதைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். மஹாவீர்ஜி, ரணக்பூர், துலெவ், மற்றும் கரேரா ஆகியவை ஜைன யாத்ரீக தலைமை மையங்களாக உள்ளன மற்றொரு முக்கியமான மத பிரிவான தாடுவைப் பின்பற்றும் தாடூபந்திஸ், உருவாகியது டி. 1603), இவர்கள் எல்லா ஆண்களுக்கு சமத்துவம், கடுமையான சைவம், மது போதை இருந்து தவிர்த்திருத்தல், மற்றும் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதை போதித்தனர்..

ராஜஸ்தானின் சுற்றுலா தலம்
இயற்கை அழகால் நிரப்பப்பட்ட ராஜஸ்தான், இந்தியாவில் ஆயிரக்கணக்கான பயணிகளை ஈர்க்கிறது. சுற்றுலா, மாநிலதின் உள்நாட்டு உற்பத்தியில் எட்டு சதவீதம் வரை செய்கிறது ராஜஸ்தான் கோட்டைகள், கோயில்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகளுக்குப் பிரபலமானது. பல பழைய மற்றும் புறக்கணிக்கப்பட்ட கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் பாரம்பரிய விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன இதனால், விருந்தோம்பல் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது ராஜஸ்தானில், பல சுற்றுலா காட்சிகள், குறிப்பாக பண்டைய, இடைக்கால கட்டமைப்பில் உள்ளது மவுண்ட் அபு, ஆஜ்மிர, ஆழ்வார் (சரிஸ்கா புலிகள் சரணாலயம்), பரத்பூர் (கியோலடியோ பறவை சரணாலயம்)பெக்கனீர், ஜெய்பூர் (பிங்க் சிட்டி)ஜோத்பூர், உத்ய்பூர், பாலி, ஜெய்சால்மர் மற்றும் சிட்டோர்கர் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்களாகும். சுற்றுலா, 1992 ஒரு தொழிலின் அந்தஸ்து வழங்கப்பட்டது.

ராஜஸ்தானில் வருகை செய்ய வெண்டிய நகரங்கள்
  • அஜ்மிர்
  • பெக்கனீர்
  • ஆழ்வார்
  • உதய்பூர்
  • ஜெய்பூர்
  • ஜோத்பூர்
  • புஷ்கர்
  • பரத்பூர்
  • சித்தாவுர்கர்
  • ஜெய்சால்மர்
  • கோட்டா
  • பண்டி

போக்குவரத்து
மாநிலம் பல தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, தேசிய நெடுஞ்சாலை 8 என்பது மிகவும் பிரபலமானது நாட்டின் முக்கிய நகரங்களுடன் மாநிலத்தை இணைக்க ராஜஸ்தானில் மூன்று விமான நிலையங்கள் உள்ளன.மாநிலத்தைன் அநேக நகரங்கள் ரெயில்கள் மூலம் இணைக்க்ப்பட்டுள்ளன. கோட்டா நகரம் மின்சக்தியுள்ள பிரிவாகும், இது மூன்று ராஜ்தானி எக்ஸ்பிரஸ், மற்றும் பிற ரயில்களா; அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்படுகின்றன அது ஜோத்பூரிலிருந்து கராச்சிக்குச் செல்லும் , தார் எக்ஸ்பிரஸ் செல்லும் ஒரு சர்வதேச ரெயில்வேயையும் பெற்றுள்ளது.மாநிலம் மற்ற நகரங்களும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள் ராஜஸ்தான் மாநில சாலை போக்குவரத்து கழகம்(RSRTC) மற்றும் பல தனியார் வண்டிகளும் இயக்கப் படுகின்றன.

Last Updated on : May 23, 2015