மத்தியபிரதேச வரைபடம்

Madhya Pradesh Map in Tamil

மத்தியபிரதேச வரைபடம்
* முக்கிய சாலைகள், ரெயில்வேஸ், நகரங்கள்,மாவட்ட எல்லைகள் முதலியவற்றை காண்பிக்கும் வரைபடம்.
மத்திய பிரதேசத்தைப் பற்றி
நாட்டின் மத்திய பகுதியில் உள்ள நிலத்தால் சூழப்பட்ட மத்திய பிரதேசம் அதன் வடமேற்கில் ராஜஸ்தான் மாநிலம், வடக்கே உத்திர பிரதேசத்தாலும், அதன் கிழக்கே சத்திஸ்கராலும், தெற்கே மஹாராஷ்டிரத்தாலும், மேறகே குஜராததாலும் எல்லைகள் அமையப் பெற்றது. நவம்பர் 1, 2000 இல் சத்திஸ்கர் அதனிலிருந்து பிரிக்கப் படும் வரை, மத்திய பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தது.

மத்தியப் பிரதேசம் மலைகள் மற்றும் சமவெளி இரண்டையும் கொண்டுள்ள ஒரு கலவையான இடஅமைப்பைப் பெற்றுள்ளது. மாநிலம், மூன்று முதன்மையான பருவங்கள் கொண்டது : குளிர்காலம் (நவம்பர் முதல் பிப்ரவரி), கோடைகாலம் (மார்ச் முத்ல் மே வரை) மற்றும் மழைக்காலம் (ஜூன் முதல் செப்டம்பர் வரை). குளிர்காலத்தில், சராசரி வெப்பநிலை 10° முதல் 27° C வரை (50° to 81° F). கோடைக்காலங்கள் 29 ° C (85 ° F) சராசரி வெப்பநிலை கொண்டு, சூடாக இருக்கும்.மற்றும் சில சமயங்களில் 48 ° C (118 ° F), என்று ஒரு உயர் வெப்பநிலை அடையும். மழைக் காலங்களில், சராசரி வெப்பநிலை 19° முதல் 30° C வரை (66° முதல் 86° வரை) இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் ஒரு சராசரி ஆண்டு மழை 1200 மி.மீ (ஏறக்குறைய 50 அங்குல), இதில்90 சதவீதம் மழை மழைகாலங்களில் விழுகிறது. இந்த மாநிலத்தின் தலைநகரம் போபால்..

மத்திய பிரதேசத்தின் சரித்திரம்
மத்தியப் பிரதேசத்தின் வரலாறு அசோகர், பெரும் மவுரிய ஆட்சியாளர் காலம் வரை நேரம் செல்கிறது. மத்திய இந்தியாவின் பெரும் பகுதிகள் குப்த பேரரசின் (300-550 AD) ஒரு பகுதியாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் முதல் பாதியில், மாநிலம் பிரபல பேரரசர் ஹர்ஷ அதிகாரப் பிரிவுகளில் ஒரு பகுதியாக இருந்தது. பத்தாவது நூற்றாண்டின் கடைசி பகுதி ஒரு குழப்ப காலமாக இருந்தது. பதினோராம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், முஸ்லிம்கள் மத்திய இந்தியாவில் நுழைந்தனர், க்ஜினி என்ற மஹ்மூத் முதலாவதாட இருந்தார், இரண்டாவதாக, தில்லி சுல்தானத்துடன் சில பகுதிகளில் இணைக்கப்பட்ட போது முகமது கோரி இருந்தார். இது மராட்டிய எழுச்சி கொண்ட முகலாயப் பேரரசின் ஒரு பகுதியை உருவாக்கியது. 1794 இல் மாதோஜி சிந்தியா மரணம் வரை, மராட்டியர்கள், மத்திய இந்தியாவில், உச்ச ஆட்சி புரிந்தனர், ஆனால் அதற்குப் பிறகு சுதந்திரம் மற்றும் சிறிய நாடுகள் தோன்றின. சிதைந்த சிறிய மாநிலங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழி வகுத்தது இந்த பகுதியை ஆட்சி செய்த, இந்தூர் ராணி அஹில்யாபாய் ஹோல்கர், கோண்ட் ராணியார் கமலா தேவி மற்றும் ராணி துர்காவதி போன்ற சில சிறந்த பெண் ஆட்சியாளர்கள் வரலாற்றில் தங்களுக்கென ஒரு இடத்தைச் செதுக்கிக் கொண்டனர்.

1947 ல், இந்தியா சுதந்திரம் அடைந்த போது, மத்திய மாகாணங்களின் பிரிட்டிஷ் இந்திய மாகாணத்தில் மற்றும் பெரார், இணைந்து மத்தியப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. எல்லை மாற்றங்களைத் தொடர்ந்து இறுதியாக சத்தீஸ்கர் மாநிலம் மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

மக்கள் தொகை
மத்திய பிரதேசம் இந்தியாவின் இதயப் பகுதியில் அமைந்துள்ளது. “MP” என்றும் அறியப்படும் இந்த மாநிலம், மொத்தம் 3,08,244 சதுர கி.மீட்டர் பரப்பளவு பரவி, இந்த மாநிலத்தை இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக செய்கிறது.போபால், மத்திய பிரதேசத்தின் தலைநகராக சேவை செய்கிறது. இந்தோர் மிகப் பெரிய நகரமாக உள்ளது. ம்ற்றும் ஜபல்பூர் மிக முக்கியமான வர்த்தக மையமாக உள்ளது. மத்தியப் பிரதேசம் மக்கள் தொகை மூலம் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநில ஆகிறது அதன் எல்லைகளை அது உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரம், சத்திஸ்கர், குஜராத் மற்றும் ராஜஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது.

புவியியல்
இந்தியாவில் உள்ள் இந்த மாநிலத்தின் புவியியல் நிலை, முக்கியமாக பூமி, பகுதி மற்றும் பகுதி வாரியாக பிளவுகள், ஆறுகள், வானிலை, மண், பயிர்கள், நிலம் அத்துடன் அதன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவை அடங்கும். அதன் புவியியல் இடம் 22.42 ° வடக்கு மற்றும் 72,54° கிழக்கு, மத்தியப் பிரதேசம் மத்திய இந்தியாவில் அமைந்திருக்கிறது. மாநிலம் அதன் எல்லைகளை உத்திர பிரதேசத்துடன் வட கிழக்கு பக்கத்திலும், ராஜஸ்தானுடன் வடமேற்கு பகுதியிலும், மேற்கே குஜராத்துடனும், தென் கிழக்கே சத்திஸ்க்ருடனும், தெற்கே மஹாராஷ்டிரத்துடனும் பகிர்ந்து கொள்கிறது.

கல்வி
மத்தியப் பிரதேசக் கல்வி முறை மிகவும் நன்கு வளர்ந்துள்ளது. மத்தியப் பிரதேச அனைத்து பள்ளி நிலை கல்வியை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம் – ஆரம்ப, நடுத்தர மற்றும் உயர் பள்ளி கல்வி. மத்தியப் பிரதேசம் பாலிடெக்னிக்குகள், தொழில்துறை கலை மற்றும் கைவினை, இசை, போன்றவற்றிக்குப் பள்ளிகள் பெற்று உள்ளது. மேலும், 12 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதனால் தான், மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு படித்தவர்களாக இருக்கிறார்கள். உஜ்ஜைன் மற்றும் சாகர்ல் அமைந்துள்ள பள்ளிகள், அதன் கல்வியின் தரத்தால்,இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள்பழமையான மற்றும் சிறந்ததாக உள்ளன. சமீபத்தில் மத்தியப் பிரதேச கல்வி முறை, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விட்டு விலகியவர்கள் மீண்டும் ஒரு முறை படிக்க உந்துதலை ஏற்படுத்த பல்வேறு பட்டறைகள் பயிற்சி அமர்வுகளை அறிமுகப் படுத்தியுள்ளது

மொழிகள்
மத்தியப் பிரதேசம் அடிக்கடி 'இந்தியாவின் இதயம்' என பெயரளிக்கப் படுவதால், மத்தியப்பிரதேசத்தின் அனைத்து மொழிகளிலும் மத்தியில் நிலவும் பிராந்திய பேச்சுவழக்கில் இருப்பது இந்தி என்பது மிகவும் தெளிவாக இருக்கிறது. அது பெரும்பான்மையாக வட இந்தியா மற்றும் மத்திய உலகினில் வசிக்கும் மக்களால் பேசப்படுகிறது உண்மையில் இந்தி, இந்திய மத்திய அரசினால உபயோகப்படுத்தும் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக இருக்கும் அந்தஸ்தை பெற்றிருப்பதை மதிக்கிறது தேவநகரி லிபி பெர்சிய-அரபிக் லிபியுடன் சேர்ந்து முதன்மையான இந்தி எழுத்து ஊடகமாக இருக்கிறது. இந்தியாவைத் தவிர, பாக்கிஸ்தான், நேபால், ஃபூஜியிலும் இந்தி பேசப்படுகிறது.

பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு
விவசாயம், மத்தியப் பிரதேசப் பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்கிறது. நிலத்தில் பாதிப் பகுதியை விட குறைவாக பயிர் செய்யத் தகுந்ததாக இருக்கிறது; எனினும் அதன் விநியோகம், நில அமைப்பு, மழை, மண் மற்றும் வேறுபாடுகளால் மிகவும் சீரற்றதாக உள்ளது. முக்கிய சாகுபடி பகுதிகள், சம்பல் பள்ளத்தாக்கு, மால்வா பீடபூமிய, ரேவா பீடபூமி, மற்றும் சத்தீஸ்கர் சமவெளிகளில் காணப்படுகின்றன. ஆற்றில் பரவும் வண்டல் மூடப்பட்டிருக்கும் நர்மதா பள்ளத்தாககு, மற்றொரு வளமான பகுதியாகும். முக்கிய பயிர்கள் அரிசி, கோதுமை, சோளம், மக்காச்சோளம், பருப்பு வகைகள் (பட்டாணி, பீன்ஸ், அல்லது பருப்பு போன்ற பருப்பு வகைகள்), மற்றும் கடலை (வேர்கடலையை) ஆகியவை.. மேற்கு மத்தியப் பிரதேசம், கோதுமை மற்றும் சோளம், அதிக முக்கியமானது போல் அரிசி, மழை உள்ள் கிழக்கு, பகுதியில் முக்கியமாக வளர்ந்து வருகிறது மாநிலம், இந்தியாவில் மிகப் பெரிய உற்பத்தியாளர் ஆகும். பிற பயிர்கள் ஆளி விதை, எள், கரும்பு, பருத்தி மற்றும், அத்துடன் மலைப்பாங்கான பகுதிகளில் வளர்க்கப்படுகின்ற் தாழ்ந்த ரக கம்பு, ஆகியவை அடங்கும். மாநிலம் மிகப் பெரிய ஓபியம் ( ராஜஸ்தான் அருகேயுள்ள் மாண்டசோர் மேற்கு மாவட்டம்) மற்றும் மார்ஜுவானா ( தென்மேற்கு காண்ட்வா மாவட்டத்தில் (கிழக்கு நிமார்) உற்பத்தியாளர் ஆகும்.

சமூகம் மற்றும் கலாச்சாரம்
மத்தியப் பிரதேசத்தில், குறைந்தது நான்கு வேளாண்மை காலநிலை மண்டலங்கள் உள்ளன, இதனால், மக்களின் வாழ்க்கை வழிகளில் மிகவும் சுவாரஸ்யமான கலப்பு இருக்கிறது. இந்திய நாட்டின் பழங்குடி மக்களில் சுமார் 40 சதவீதத்திற்கு வீடாக உள்ளது. மாநிலத்தில் மூன்று தனித்துவமான பழங்குடி குழுக்கள் உள்ளன.

பெரிய குழு, கோண்டுவானா, என் மாநில மத்திய பகுதியில் அறியப்படுகிற ஒரு முக்கிய பகுதியாக ஆண்ட கோண்ட், மூலம் உருவாக்கப்பட்டது. மேற்கு மத்தியப் பிரதேசம் பில்கள், ஒரு வண்ணமயமான குழு வீரர்கள் மற்றும் வேட்டைக்காரர்கள் வசிக்கும் இடமாகும். கிழக்கு மத்தியப் பிரதேசம் இப்போது கிரிஸ்துவராக மாறி விட்ட் ஓரான்ஸ் ஆதிக்கத்தில் உள்ளது. மராத்தி மொழியும் பலராலும் பேசப்படுகிறது என்றாலும் இந்தி, மிகவும் பரவலாக பேசப்படும் மொழியாகும். உருது, ஒரியா, குஜராத்தி, பஞ்சாபியும் கணிசமான எண்ணிக்கையில் பேசப்படுகிறது. பில்கள் பீலி மற்றும் கோண்ட், கோன்டி மொழியையும் பேசுகின்றனர்..

கோண்ட், பில்கள் மற்றும் பஞ்சாராக்கள் பாஹ்(ஒரு வாள் நடனம்), லோடா(அவர்களது தலையில் முழு நீருடன் பெண்கள் நடனம்), மற்றும் பிற ஊன்றுகோல் நடனங்கள் போன்ற பல துடிப்பான பழங்குடி நடனங்களை ஆடுகின்றனர். ஜவுளி முக்கியமானது ஆனால் மத்திய பிரதேசம் ஒரு வலுவான பாரம்பரிய கிராம கைவினைத் தொழிலைப் பெற்றுள்ளது. கைத்தறி, சாந்தேரி மற்றும் மகேஷ்வர் பட்டு குறிப்பாக விரும்பப் படுகின்றன. பழங்குடி மக்கள் கவர்ச்சிகரமான கைவினைப் பொருட்களைத் தயாரிக்கின்றனர். தங்களது சிற்றின்ப கலை உலகம் முழுவதும் அறியப்பட்ட கோவில்களில் மாநிலத்தின் வடக்கில் சாட்டார்புர் மாவட்டத்திலுள்ள் கஜுராஹோவ நன்கு அறியப்பட்டது.. கி.பி. 1000 காலத்தில் இருந்து, அவைகள் சண்டேலா மன்னர்கள் கட்டியவை. குவாலியர் மற்றும் அதன் அருகிலுள்ள கோயில்களும் மேலும் குறிப்பிடப் பட வேண்டியவை..

அரசு மற்றும் அரசியல்
மத்தியப் பிரதேச மாநிலம், 51 மாவட்டங்களால் உருவாக்கப்பட்டது .பரப்பளவில், இது ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய மாநிலம் ஆகிறது. மத்தியப் பிரதேச அரசு ஒரு நிர்வாக, ஒரு சட்டமன்ற, மற்றும் ஒரு நீதித்துறை பிரிவால் உருவாக்கப்பட்டது. அரசின் நிர்வாகக் கிளை ஆளுநரால் தலைமையேற்கப் பட்டது. நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல, மாநிலத்தின் தலைவர் ஆளுநராவார். அவர் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, இந்திய ஜனாதிபதியால் பரிந்துரைக்கப் படுகிறார். கவர்னரின் நிலை பெரும்பாலும் முறையானது.

போக்குவரத்து
மத்தியப் பிரதேசத்தின் பெரும் பகுதி பஸ் மற்றும் ரயில் சேவைகளால் சூழப்பட்டுள்ளது. சாலை நெட்வொர்க் இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன், இந்த மாநிலத்தை இணைக்கும் பல தேசிய நெடுஞ்சாலைகளைப் பெற்றுள்ளன. ஜபல்பூர், மாநிலத்தில் இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மண்டல தலைமையகமாகும். குவாலியர், இந்தூர்,போபால், ஜபல்பூர் என் நான்கு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையங்கள் உள்ளன. சுமார் 2000 பஸ்கள் இந்த நகரங்களின் உள்ளே தினசரி ஓடிக்கொண்டிருக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் உள்ள மிகவும் பரபரப்பான விமான நிலையம் இந்தூராகும். மாநிலத்தின் பிற விமான நிலையங்கள் ஜபல்பூர் விமான நிலையம், க்வாலியர் விமான நிலையம், போபாலிலுள்ள் ராஜ போக் விமான நிலையம் மற்றும் கஜ்ராஹோ விமான நிலையம்.

மத்திய பிரதேசத்தின் சுற்றுலா தலங்கள்
மத்திய பிரதேச மாநிலம், உண்மையில் “இந்திய 'இதயம்' ஆகிறது. இந்த மாநில சுற்றுலா, இந்தியா என்று அழைக்கப்படுகிற மந்திர மற்றும் மர்மமான நாட்டின் மையத்தில் ஒரு பயணமாகும். மத்தியப் பிரதேச சுற்றுலா மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல நினைவிடங்கள், நேர்த்தியாய் குடையப்பட்ட கோயில்கள், கோட்டைகள் மற்றும் அரண்மனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. சுற்றுலா தவிர்க்க முடியாத மாநிலத்தின் இயற்கை அழகை மூடாமல் காண்பிக்கிறது. அழகான நில இடவியல்பு பெரும்பாலும் ஒரு பீடபூமி, மற்றும் அந்த்ப் பீடபூமி இடையிடையே தாவிச் செல்லும் பிரமிக்க வைக்கும் மலைத் தொடர்கள், நீரோடை வண்டிகள், மெதுவாக வளைந்து நெளியும் ஆறுகள் மற்றும் பல மைகள் அடர்ந்த, தடித்த காட்டு நிலங்களால் மூடப்பட்டுள்ளது.

வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள்
மத்தியப் பிரதேசம் வன சுற்றுப்பயணங்கள்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் காணப்படுகின்ற விலங்கு பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் என்பவை அடங்கியுள்ளன.. வனவிலங்கு சுற்றுப்பயணங்கள், வனவாழ்க்கை வளங்களை ஒரு வரிசை வழங்குகி உண்மையில் பார்வையாளர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. மத்தியப் பிரதேசம் வன சுற்றுப்பயணங்கள், முக்கியமாக விலங்குகளை அவற்றின் இயற்கையான இடத்தில் பார்க்கும் உணர்வு கிடைக்கும் பொருட்டு தேசிய காடுகளில் ஒரு குறுகிய பயணத்தில் சுட்டிக் காட்டுகின்றன. இந்த பாதுகாக்கப்பட்ட காடுகள், உண்மையான காடுகள் போலல்லாமல் மனிதர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது; இருந்தாலும் அவை சுற்றுலா பயணிகளுக்கு காட்டில் இருந்த ஒரு சுவை கொடுககின்றன..

மத்திய பிரதேசத்தின் விடுதிகள் (ஹோட்டல்கள்)
மத்திய பிரதேசம் இந்தியாவின் முக்கியமான சுற்றுலா இடங்களில் ஒன்று. மாநிலம் பாரம்பரியத்திலிருந்து, ஐந்து நட்சத்திரங்கள் மற்றும் பட்ஜெட் ஹோட்டல்கள் வரை, பல விடுதிகளுக்கு வீடாக இருக்கிறது. தங்கள் உலகத் தர வசதிகள் மற்றும் சேவைகளுக்காக மத்தியப் பிரதேசத்தில் உள்ள விடுதிகளை நாட்டிலுள்ள் சிறந்தவற்றுடன் ஒப்பிட முடிய்ம்.

விழாக்கள்பண்டிகைகள்
இந்திய கலாச்சார பன்முகத்தன்மை, அதன் அனைத்து மாநிலங்களில் பல கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்களைக் கொண்டாடும் வழி வகுத்துள்ளது. மத்திய பிரதேசம் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏனெனில் அவை கிராமப்புற பகுதிகளில் வாழும் இந்தியர்களின் உண்மையான கலாச்சாரத்தை காடடுவதால் அதன் கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் பரவலாக பிரபலமாக உள்ளன. இந்த கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் எந்த குறிப்பிட்ட சமூகத்தாருகு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் அனைத்து சமூகங்களாலும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஈர்க்கும் என்று மத்தியப் பிரதேச கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள், பழங்குடி கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் ஆகும். நீங்கள் இதன் மூலம் பழங்குடி சடங்குகள் மற்றும் இந்தியாவின் பழமையையும் காண வாய்ப்பு கிடைக்கும்

Last Updated on : May 23, 2015