ஜார்கண்ட் வரைபடம்

Jharkhand Map in Tamil

ஜார்கண்ட் வரைபடம்
* முக்கிய சாலைகள், ரெயில்வேஸ், நதிகள், தேசிய நெடுஞ்சாலைகள் முதலியவற்றைக் காண்பிக்கும் வரைபடம்.
ஜார்க்கண்ட் பற்றி
ஜார்க்கண்ட் 'காடுகள் நிலம்' – கொடையாக தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பெற்றது. இயற்கை மற்றும் அழகின் ஒரு முழுமையான பரந்த பார்வையைப் பார்க்க, ஒருவர் உயிரியல் பூங்காக்கள் மற்றும் தேசிய பூங்காக்களுக்குச் செல்ல வேண்டும்..இந்த மாநிலம் இந்தியாவின் கிழக்கு பாகத்தில் அமைந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு, இது தெற்கு பீகாரிலிருந்து பிளவாக்கப் பட்டு, மற்றொரு மாநிலமாக உருவாக்கப் பட்டது.

ஜார்கண்ட் இநதிய மாநிலங்களால் மேற்கு வங்கம் (கிழக்கு) உத்தர பிரதேசம் (மேற்கு) சத்திஸ்கர் ( மேற்கு) பீகார் (வடக்கு) மற்றும் ஒரிசா (தெற்கு) சூழப்பட்டுள்ளது. இந்த மாநிலம் 30,778 சதுர கி.மீ பரவியுள்ளது. ராஞ்சி, மாநிலத்தின் பிரதம தலைநகர் ஆகிறது, அதே சமயம் தொழில்துறை நோக்கங்களுக்கான் பெரிய நகரம் ஜாம்ஷெட்பூர் ஆகிறது.. மாநிலத்தின் துணை தலைநகர் டும்கா. மற்ற பிரதான் நகரங்கள் ஹசாரிபாக்,.தான்பாத் மற்றும் பொகாரோ.

சரித்திரம்
ஜார்கண்டின் வேர்களை மகத பேரரசின் சுவடுகளைக் காணலாம். மொகலாயர் காலத்தில், இந்தப் பகுதி குகாரா என்று அழைக்கப்பட்டது. பிரிட்டிஷார் இந்த பகுதியை ஆள்வதற்கு 1765க்குப் பிறகு வந்தனர், இந்த நிலம் ஜார்க்கண்ட் என்று பெயரிடப்பட்டது. சந்தால் பழங்குடி இனத்திலிருந்து தில்கா மான்ஜி 1771 இல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்குத் தலைவராக இருந்தார். அதற்குப் பின் உடனே, 1779 இல். பூமியிஜ் பழங்குடி, பிரிட்டிஷாருக்கு எதிராக தற்போதைய மேற்கு வங்கத்திற்காக போராடினர். அதற்கு நீண்ட காலம் பிறகு, பாலமனில் செரோ பழங்குடிகளின் அமைதியின்மை காணப்பட்டது. 1832 இல் பழங்குடிகளின் எழுச்சிகள், ஜார்க்கண்டை, அடிப்படையாகக் கொண்ட பிரிட்டிஷ் நிர்வாகத்தின் மீது ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கியது. பிர்சா முண்டா' கீழ் மிக நீண்ட மற்றும் கடைசி பழங்குடி எழுச்சிகள், 1895 ல் வெடித்து, 1900 வரை தொடர்ந்தது.

புவியியல்
மாநிலம், சந்தால் பர்கானாஸ் மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமியில் அமைந்துள்ளது. ஜார்க்கண்ட் மிக அதிக பகுதிகள் சோட்டா நாக்பூர் பீடபூமியின் கீழ் வருகிறது. கோயல் பிராம்மணி, தாமோதர், சுபர்நரேகா மற்றும் கார்கய் போன்ற ஆறுகள் இங்கே பாய்கின்றன.. ஒருவர், லோத் அருவியில் இருந்து காடுகள், மலைகள் மற்றும் பீடபூமி வனப்பை ரசிக்க முடியும். மாநிலத்தின் அடர்ந்த காட்டில், ஆசிய யானைகள் மற்றும், புலிகளின், ஒரு பெரிய தொகை உள்ளது. ஜார்க்கண்ட் மண் உள்ளடக்கம் கற்கள் மற்றும் பாறைகளின் சிதைவினைக் கொண்டிருக்கிறது. இந்த மண்ணின் கலவை மேலும் பிரிக்கப்பட்டுள்ளது மற்றுன் மாநிலம் முழுவதும் காணப்படுகிறது. ஒருவர் ராஜ்மஹால் பகுதி மற்றும் தாமோதர் பள்ளத்தாக்கில் சிவப்பு மண்ணைக் கண்டறிய முடியும். பர்காகாவ், கத்ராஸ்s, சார்க்கண்ட், கோதெர்மா, மற்றும் மந்தார் மலையின் சில பகுதிகளில் மைக்கா துகள்கள் கொண்ட, மைக்காசியல் மண் இருக்கிறது. தன்பாத் மற்றும் ஹசாரிபாக் மணல் மண்ணும் மற்றும் ராஜ்மஹால் பகுதியில் பெரும் பகுதி கருப்பு மண்ணும் உள்ளது, தும்கா, மேற்கு ராஞ்சி மற்றும் சிங்க்பும், சந்தால் பர்கானாஸ் பகுதிகள் சரளை மண் கொண்டுள்ளன.

அரசு மற்றும் அரசியல்
முதல்வர், ஜார்கண்ட் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ஆளுநர் மாநில சட்டப்படி தலைவராவார்.,நிறைய தேசிய மற்றும் பிராந்திய அளவிலான அரசியல் கட்சிகள் ஜார்க்கண்ட் தேர்தல்களில் பங்கு பெறுகின்றன. ஜார்க்கண்ட் தேர்தலில் மிக தீவிரமாக, தேசிய கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி (BJP), இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உள்ளன. மாநில அளவிலான அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (JMM) முக்கிய்மான கட்சிகளில் ஒன்றாகும். பல பதிவு செய்யப்பட்ட பிராந்திய கட்சிகள் ஜார்க்கண்ட் அரசியலில் மிகவும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றன, ஆனால் அவை பெரிய அளவில் இன்னும் அரசியல் தாக்கத்தைப் பெறவில்லை.

கல்வி
2011 கணக்கெடுப்பின் படி, மாநிலத்தின் கல்வியறிவு விகிதம் 67.63 சதவீதமாகும்.. ஆண்களின் கல்வியறிவு மாநிலத்தில் 78.45% மற்றும் பெண்களின் கல்வியறவு 56.21%. மேலும், மாநிலத்தின் 9 மாவட்டங்கள், சராசரிக்கு மேலாக கல்வியறிவு பெற்றுள்ளன. மாநிலம் அரசு நடத்தும் மற்றும் த்னியார் நடத்தும் இரண்டு பள்ளிகளையும் பெற்றுள்ளன. ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளியின் கற்பிக்கும் முறை அந்த பள்ளியைச் பொறுத்து வேறுபடுகிறது. ஜார்கண்டில் உள்ள நன்கு அறியப்பட்ட பள்ளிகள் சில, டி-நொபிலி பள்ளி, டிஏவி ஹெகல், தில்லி பப்ளிக் பள்ளி, ஆக்ஸ்போர்டு பொது பள்ளி, செயின்ட் தாமஸ் பள்ளி, சின்மயா பப்ளிக் பள்ளி, செயின்ட் சேவியர், கேந்திரிய வித்யாலயா, சிசு மந்திர், சேக்ரட் ஹார்ட் பள்ளி, லயோலா பள்ளி, சுரேந்திரநாத் நூற்றாண்டு விழா பள்ளி, போனறவை. ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, நான்கு வேறுபட்ட திட்டங்கள் -- DPEP, SSA, NPEGEL மற்றும் KGBV ஆகியவை ஜார்க்கண்ட் கல்வி திட்ட கவுன்சிலால் (JEPC) முதன்மை நிலை கல்வி விழிப்புணர்வை பரப்பும் பொருட்டு அறிமுகப்படுத்த பட்டன. எனினும், மெதுவான வேலை செய்தல் காரணத்த்டால், அரசு இன்னும் 100% மாணவர் சேர்க்கையை இன்னும் அடையவில்லை.

பொருளாதாரம்
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் பின் தொடரும், இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கனிம வளத் தயாரிப்பாளர் ஆகும். இரும்பு தாது, தாமிரம், நிலக்கரி, யுரேனியம், பாக்சைட், மைக்கா, சுண்ணாம்புக்கல் மற்றும் கிராஃபைட் போன்ற உலோகங்கள் இந்த மாநிலத்தில் காணப்படுகின்றன அதன் பணக்கார கனிம வளம் காரணமாக, வரும் ஆண்டுகளில் இந்த மாநிலம் தன்து தனி நபர் வருமான உயர்வதை எதிர்பார்க்கிறது. மாநிலம், நன்கு அறியப்பட்ட தொழிற்துறை நகரங்களான பொக்காரோ ஸ்டீல் நகரம்,, ராஞ்சி, ராம்கர் மற்றும் தன்பாத் ஆகியவை கொண்டுள்ளது. சிந்திரி(தன்பாத்) இப்போது மூடப்பட்டு விட்ட பெரிய உரத் தொழிற்சாலையைக் கொண்டிருந்தது.ஜாம்ஷெட்பூர், முதலாவது இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை உள்ளது. பொக்காரோ ஆசியாவின் பெரிய இரும்பு எஃகு தொழிற்சாலை உள்ளது. குமியா, பொகாரோவில் மிகப் பெரிய வெடிமருந்துகள் உள்ளது., என்.டி.பி.சி, சுமார் ரூ 1,800 கோடி முதலீட்டைக் கொண்டு வரும் நிலக்கரி உற்பத்தியை ஆரம்பிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மக்கள் தொகை புள்ளி விவரம்
2011 கணக்கெடுப்பின் படி, மாநிலத்தின் தற்போதைய மக்கள் தொகை 32.96 மில்லியன் ) ஆண்கள் 16.93 மில்லியன், பெண்கள் 16.03 மில்லியன்). மாநிலம் 24 மாவட்டங்கள் மற்றும் 32,620 கிராமங்களைக் அடங்கியது. வெறும் 8.484 கிராமங்கள் இணைப்புகள் உள்ளவை. இந்த எண்ணிக்கையில் 28 சதவிகிதம் பழங்குடியினர் அடக்கம் மற்றும் 12 சதவிகிதம் மக்கள் தொகை தாழ்த்தப்பட்ட ஜாதியினர். நகரமயமாதல் மற்றும் தொழில்மயமாக்கல் மோசமாக இந்த பகுதிகளைப் பாதித்துள்ளது. சுமார் 68.5 % இந்துயிசத்தைப் பின்பற்றுகின்றனர், 13.2% இஸ்லாமியத்தையும், 13% அனிமிஸ்டிக் சர்னாவையும், 4.1% கிறித்துவத்தையும் பின்பற்றுகின்றனர்.மீதமுள்ள மக்கள் புத்திசம், ஜைனமதம் மற்றும் சீக்கிய மதத்தைப் பின்பற்றுகின்றனர். மாநிலம், அசூர்,பிஞ்ச்சியா, கோண்ட், ஹோ, காரியா, கார்வார், , பஞ்சாரா, [பத்துன்டி,i, மால் பஹாரியா,, சிக், பாரைக், கோர்பா, பிரஹொர், மகேலி, கோண்ட், சவ்ரியா பஹாரியா, கிஸான், கோர்வா, மால் பஹாரியா, முண்டா, ஓரோன், சந்தால், சவ்ரியாபஹாரியா, சவார், சபர் பராஹியா, பிராஜியா, ஹில் காரியா, முதலிய பழங்குடி சமூகங்களைக் கொண்டுள்ளன.

கலாச்சாரம்
இங்கு பழங்குடியினர் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், இயற்கை அவர்கள் பண்பாடு மற்றும் வாழ்வில் ஒரு உயிர்நிலையான மற்றும் முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. மக்கள் புனித மரங்களை வாங்கி மற்றும் அவற்றை பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக முற்றத்தில் நடுகிறார்கள். மக்கள் பின்பற்றும் சடங்குகளில் சில ஜிடியா பூஜா, கர்மா பூஜா, சர்குல் முதலியன மகர சங்க்ராந்தியின் போது, மக்கள் டிசு ஃபர் அல்லது போயுஷ் மேளாவைக் கொண்டாடுகிறார்கள், உண்மையில் இது அறுவடை பண்டிகையாகும். இது ஒரு நாட்டுப்புற நம்பிக்கையாகும் மற்றும் மிகவும் வண்ணமயமான மற்றும் பிரகாசமான கொண்டாட்டம் ஆகும். முழு சோட்டா நாக்பூர் பீடபூமி பிராந்தியம் பெரிய அளவில் கரம் விழாவை ஆடம்பரமாகவும், காட்சிகளுடனும் கொண்டாடுகிறது. குன்வார்-சுக்ல-பட்சத்திற்குப் பிறகு, அது 15 நாட்கள் கொண்டாடப் படுகிறது. திருவிழாக்கு தயார் செய்யும் பொருட்டு, மக்கள் புதிய ஆடைகள், குங்குமம், எண்ணெய், டாலியா வாங்கி, மற்றும் பலகாரங்கள் தயார் செய்கின்றனர்.. ஆண்கள் மற்றும் பெண்கள் அந்தந்த குடும்பங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றனர், அவர்களுக்கு கரம் உடைகள் வழங்கப்படுகின்றன, இது அவர்கள் திருமணமாகாதவர் என்பதைக் குறிக்கிறது.

மொழி
மாநிலத்தின் பிரதான மொழி ஹிந்தியாகும். இங்குள்ள மக்கள் பல்வேறு மொழிகளையும் பேசுகின்றனர். முண்டா, இந்தோ-ஆரியன் மற்றும் திராவிடம் இங்கு பேசப்படும் மூன்று முக்கியய்மான மொழி குழுக்களாகும்.இவைகள் சகோதரி மொழிகளாகும் மற்றும் உபயோகிக்கப் படும் பல வர்ர்த்தைகள் 80-90 சதவிகிதம் ஒன்றாகும். சந்தாலி, பூமிஜ், ஹோ, முன்டாரி மற்றும் காரியா போன்ற மொழிகள் முண்டாவின் கீழ் வருகின்றன. பெங்காலி, சத்டி, மைதிலி, பஞ்ச்பர்கனியா, ஒரியா, கோர்தா, நாக்புரி மற்றும் குர்மாலி மொழிகள் இந்தோ=ஆரியன் கீழ , பஹாரியா(மால்டோ_ கொர்வா மற்றும் ஓரான்(குருக்_ ஆகியவை திராவிட மொழியின் கீழும் வருகின்றன.

மக்கள் பெருன்பான்மையாக சந்தாலி மொழியை, ஜம்தரா, கொட்டா, சாகிப்கன்ச், டும்கா, பாகுர், சராய்கேலா=கார்சவான் மாவட்டங்களிலு,. சிங்க்பும்மின் கிழககிலும் பேசுகிறார்கள். முன்டாரி, ராஞ்சிஸ்யின் சில பகுதிகள், குன்டி, மேற்கு சிங்க்பும், லேட்ஹர் மாவட்டங்களிலும், சிம்தேகா, கும்லாவிலும் பேசுகிறார்கள். சரய்கேலா=கார்சவான் மாவட்டங்கள் மற்றும் மேற்கு சிங்க்பும்மில் மககள் ஹோ மொழியைப் பேசுகின்றனர்,.

போக்குவரத்து
ஜார்க்கண்ட் அடர்ந்த ரயில் பாதை உள்ளது பெரும்பாலான மாவட்டங்கள் நன்கு ரயில் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதைத் தவிர, ராஞ்சியில் பிர்ஸா முண்டா விமான நிலையம் என்றழைக்கப் படும் ஒரு விமான நிலையம் உள்ளது. இந்திய விமான ஆணையம் உள்நாட்டு விமான நிலையத்தை நிர்வகிக்கிறது. அது சரியாக நகரத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் உள்ள் ஹினோ பெருநகரம் பகுதியில், அமைந்துள்ளது. மேலும், நகரங்களில் சாலை போக்குவரத்து நன்கு வளர்ந்துள்ளது.இந்தப் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் ஐந்திலிருந்து பத்து நிமிட இடைவெளியில் வருகின்றன. ஒருவர் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் கிராமங்களிலிருந்து பிரதான மாவட்டங்களுக்கு பேருந்து மூலம் பயணம் செய்யலாம். மேலும், மாநில போக்குவரத்து துறை மாநில அதிகபட்ச வருவாய் ஈட்டுகிறது. நகர்ப்புற வளர்ச்சித் துறை தன்பாத், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் போக்குவரத்து துறை மண்டல அலுவலகங்களின் மூலம் அனுமதியின் கீழ் பஸ் சேவை வழங்குகிறது.

சுற்றுலா தளங்கள்
சுற்றுலாத் தொழில், மாநிலத்தின் வருவாயில் பெரிய பங்கை அளிக்கிறது. வனவிலங்கு சரணாலயங்கள், புனித கோவில்கள், அருங்காட்சியகம் போன்றவை தவிரல், மாநிலம் நிறைய காடுகள் மற்றும் மலைகளைக் கொண்டிருக்கிறது. இது நாடு முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இது பல உலக மற்றும் இந்திய நிறுவனங்கள் இருப்பதன் காரணமாக,வணிக சுற்றுலாவையும் ஈர்க்கிறது. இந்த மாநிலத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்:

  • ராஞ்சி மலைகள்
  • தாசம் அருவி
  • சூரிய கோவில்
  • ஜம்ஷெட்பூர்r
  • பைத்யனாத் டாம்
  • நெடர்ஹேட்

Last Updated on : May 23, 2015