கோவா வரைபடம்

Goa Map in Tamil

கோவா வரைபடம்
* மாவட்டங்கள், ரெயில்வேஸ், ஆறுகள் மற்றும் முக்கிய சாலை பிணைப்புகளுடன் கோவாவின் வரைபடம்.
கோவாவைப் பற்றி
அதன் கவர்ச்சிகரமான கடற்கரைகள், பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் வழிபாட்டு இடங்களுக்காகவும் நன்கு அறியப்பட்ட கோவர், உண்மையிலேயே பயணிகளின் சந்தோஷமாகும். நாட்டின் மேற்கு பாகத்தில் அமைந்துள்ள் இது, பரப்பளவு மற்றும் குறைவான மக்கள் தொகையில், இந்தியாவின் மிகவும் சிறிய மாநிலமாகும்.வடக்கே மகாராஷ்டிரா எல்லையாக, மேற்கே அரபிக் கடல் மற்றும் தெற்கு மற்றும் கிழக்கே கர்நாடகாவை எல்லையாகக் கொண்ட கோவா, இந்தியாவின் கொங்கன் பகுதியின் முக்கிய பகுதியை உள்ளடக்கியது. பானாஜி, கோவாவின் தலைநகரமாகும், மற்றும் இந்த மாநிலம் ஒரு மிக உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் (GDP). கொண்டு, இந்தியாவில் மிகப் பெரிய பணக்கார மாநிலமாக கருதப் படுகிறது.

ஒவ்வொரு வருடமும், உலகின் பல இடத்திலிருந்து, ஆயிரகணக்கான மக்கள் அழகிய மணல் கடற்கரைகளை, வசியப்படுத்தும் மலைகள், இவைகளைத் தவிர மூச்சடைக்கும் கண்ணுக்கினிய இயற்கை அழகைக் .காணும் பொருட்டும், இங்கே வருகிறார்கள். இந்த மாநிலத்தின் மொத்த பரப்பளவு 3702 கி.மீ விட அதிகமில்லை, மற்றும் கடலோரம் சுமார் 100 கி.மீ. நீண்டுள்ளது. அது அவர்களுக்கு ஒரு முன்னாள் மாகாணமாக இருந்ததால், கோவா, போர்த்துகீசிய கலாச்சார செல்வாக்கை வெளிப்படுத்துகிறது. வடக்கு கோவா 6 தாலுககளாக பிரிக்கப்பட்டுள்ளது, அதேசமயம்,தெற்கு கோவாவை 5 தாலுக்களாகவும் ஒவ்வொன்றிலும் 233 மற்றும் 150 மாவட்டங்களுடன் பிரிக்கலாம். மாநில மொத்த ஜனத்தொகை 1.457.723 ஆகிறது மற்றும் முழு நாட்டின் நான்காவது குறைந்த ஜனத்தொகையாக உள்ளது. இநத இடத்தின் வெப்பமண்டல மழை காலநிலை, கோவாவை வெப்பம் மற்றும் ஈரப்பதம் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு விடுமுறைக்கு ஒரு சிறந்த இடமாகச் செய்கிறது.

கோவாவின் வரலாறு
கோவாவின் வரலாறு மிகவும் வளமான மற்றும் வேறுபட்டதாகும். . கி.மு. 3 ஆம் நூற்றாண்டில், கோவா மவுரிய வம்சத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது, மற்றும் அவர்களுக்குப் பிறகு, .இந்த மாநிலம் வெற்றிகரமாக சத்யாகனாஸ், சாளுக்கியர், ஸ்ரீஹராஸ், கொங்கணி மற்றும் கடம்பர்களால் ஆளப்பட்டது. 14 நூற்றாண்டில் தான், கோவா முஸ்லீம்களால வெற்றி பெறப்பட்டது, அதற்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்ய இந்து அரசர் ஹரிஹரா அந்த பகுதியிலிருந்து வெளியே தள்ளப்பட்டார். 200 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு, 1540 இல், முஸ்லீம்கள் வர்த்தகர்களாக வந்தபோர்ச்சுகீசியரால் தோற்கடிக்கப்பட்டனர், மற்றும் அவர்கள் த்ங்கள் மேலாதிக்கத்தை கடலோர பகுதி முழுவதும் நிலைநிறுத்தினர். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்து போது, போர்த்துகீசியம் இந்திய அரசாங்கம் யூனியனிடம், கோவாவை ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது, ஆனால் அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. 1954 ல், கோவாவின் தேசியவாதிகள், போர்த்துகீசியரின் தாத்ரா மற்றும் நகர் நிலப்பகுதிகளைக் கைப்பற்றுவுதன் மூலம்,ஒரு இந்திய சார்பு மேலாதிக்கத்தை நிறுவினர். அடுத்த ஆண்டு, ஒரு பெரிய படையுடன் சத்தியாக்கிரகிகள், கோவா பிரதேசத்தில் நுழைந்தனர் பின் ஒரு தொடர் போர்த்துக்கல் மற்றும் இந்தியா இடையிலான பேரப் பேச்சிற்குப் பிறகு, முன்னவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். 1961 இல், இந்திய விமானப் படை மற்றும் கடற்படை, படையெடுத்து மற்றும் தங்கள் சொந்தமாக கோவாவைக் கைப்பற்றியது அத்துடன் ஒரு வருடத்திற்குப் பிறகு, கோவாவிற்கு இந்திய அரசாங்கத்தின் கீழ் யூனியன் பிரதேசத்தில் அந்தஸ்து வழங்கப்பட்டது. கோவா மாநில அந்தஸ்தை பெறுவதற்கு ம்ற்றொரு 26 ஆண்டுகள் எடுத்தது, 1987 ல், இறுதியாக கோவா அதிகாரபூர்வமாக ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

புவியியல் மற்றும் தட்பவெப்பம்
இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையில் கொங்கன் கரையோரm ஒரு பிரதம இடத்தில் இருப்பதால், கோவா வடக்கில் மஹாராஷ்டிராவில் இருந்து தன்னை பிரிக்கிற தெர்கோல் என்ற் நதியுடன் ஒரு இயற்கை எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகல், மாநிலத்தின் கிழக்கில் நிற்க, மற்றும் மேற்குப் பகுதியில் பிரம்மாண்டமான அரபிக் கடல் இருக்கிறது. கோவாவை நான்கு வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கலாம், மர்மகோவா, திஸ்வாடி, சல்சிட்டெ மற்றும் பார்டெஸ் போன்ற பகுதிகளில் கடலோர சமவெளி, சான்குயம் சட்டாரி, கொங்கனா, மற்றும் போண்டா போன்ற மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதிகளைக் கொண்டுள்ள கிழக்கு மலைப்பாங்கான பகுதி, உருளும் மேட்டை உள்ளடக்கிய வெள்ளச் சமவெளிகள் மற்றும் கிழக்கு சான்குயம், பிகோலிம், பெர்னெம், மற்றும் கியூபியம் போன்ற பகுதிகளைக் கொண்ட மத்திய பள்ளத்தாக்கு நிலங்கள்.முக்கிய ஆறுகளான மண்டோவி, சுஹாரி டிராகோல், சால் சோப்ரா மற்றும் தல்போனா, மாநிலம் முழுவதும் ஓடி, ஒரே கவர்ச்சியான கடலோர சுத்த அழகு அதிகரிக்க. பல விரிகுடாக்கள் மற்றும் முகத்துவாரங்களை உருவாக்கி, அரபிக் கடலைச் சந்திக்கின்றது. கோவா ஒரு மிதமான, சூடான கோடை மற்றும் குளிர்ச்சியான குளிர்காலத்துகன், வழக்கமான வெப்ப மண்டல பருவ காலநிலை உள்ளது. ஆண்டின் பிற காலங்கள் முழுவதும், பருவகாலநிலை மிகவும் இனிமையான உள்ளது. பருவமழை, அதிக மழை பெறும் ஜூலையில் மாநிலத்தின் ஒரு முக்கிய பருவங்கள் ஆகிறது. மாநிலத்தின் ஒரு கணிசமான பகுதி காடுகளால், சூழப்பட்டுள்தால்,இது மாநிலத்திற்கு உயிர் பன்முகத்தன்மையை மிகவும் சேர்க்கிறது..

மக்கள் தொகை புள்ளி விவரம்
கோவா ஒரு சிறிய பகுதியில், குறைந்தபட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது நிலையில் உள்ளது. மாநிலத்திற்கு வளர்ச்சி விகிதம் 15% இருக்கிறது. கோவா முக்கியமாக கிராமப்புற பகுதியில் இருந்து விலகி வாழும் சுமார் 50% நகர்ப்புற மக்கள் தொகை உள்ளது, ஒப்பீட்டில் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள் தொகை கொண்டது மற்றும் இந்த மாநிலம், குறைந்த எண்ணிக்கையில் பழங்குடியினர் வாழும் இடமாகவும் கருதப் படுகிறது. அரசாங்கத்தின் புள்ளி விபரங்களின் படி, மக்களில் கிட்டத்தட்ட 65%, அவர்கள் ஆதிக்கப் பகுதிகள் இந்த மாநிலத்திற்கு அருகில் உள்ளவை என்பதால் முக்கியமாக, மராத்தியர், தெலுங்கர், தமிழர்கள் மற்றும் குஜராத்தியர்கள் கொண்ட, இந்துக்கள்.வாழ்கிறார்கள். அடுத்ததாக மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 7% கிருத்துவர்கள் இருக்கிறார்கள். போர்ச்சுகீசியர்கள் சுமார் 450 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர் என்பதால் இன்று கூட தங்கள் சொந்த பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகினர் என்பதால் போர்ச்சுகீசியர்களின் சில காலனிகள் இன்னும் மாநிலத்தில் இருக்கும் என நம்பப்படுகிறது இஸ்லாம், சீக்கியர்கள், புத்த் மதத்தினர் மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவரிகளும் இந்த மாநிலத்தில் அமைதியாகவும் மற்றும் ஒருவரோடொருவர் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதாரம்
கோவா, ஒரு முழு இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியைப் போல் மூன்று மடங்கு இருப்பதால் நாட்டின் பணக்கார மாநிலமாகக் கருதப்படுகிறது. மாநில முக்கிய தொழில் சுற்றுலாவாகும், மற்றும் அதற்கான அனைத்து புகழும் வசியப்படுத்தும் கடற்கரைகள், இந்த இடத்தை வெளிப்படையான அழகுடன் அலங்கரித்த இயற்கைக்குச் செல்கிறது. வெளிநாட்டவர்கள், கிட்டத்தட்ட 12% குளிர் காலத்திலும் அதே போல் கோடையைச் சுற்றியும், ஒவ்வொரு ஆண்டும் கோவாக்கு வருகிறார்கள். உச்ச சீசன்களில், நாடு முழுவதிலுமிருந்து வரும் உள்நாட்டு பயணிகளிடம் இருந்தும் இந்த மாநிலம் நிறைய சம்பாதிக்கின்றது.. கோவா நிலம், கனிமங்கள் மற்றும் உலோக தாதுக்கள் நிறைந்த உள்ளது, எனவே மாநில பொருளாதாரத்தில் இரண்டாவது மிகப் பெரிய ஆதாரமாக, சுரங்கங்கள் இருக்கிறது. மாங்கனீசு, இரும்பு, பாக்சைட், களிமண், சிலிக்கான் மற்றும் சுண்ணாம்பு போன்ற தாதுக்கள் கோவாவின் பல்வேறு பகுதிகளில் தோண்டப்படுகிறது. மர்மகோவா துறைமுகம் நாட்டின் இரும்புத் தாது ஏற்றுமதியில் 40%. மேற்படடு வழி வகுக்கிறது. சீசா கோவா, டெம்போ மற்றும் ராம்பண்ட்,ஆகியவை மாநிலத்தில் பரவலாக இரும்பு தாதுக்கள் நிறைந்த சில பகுதிகளாக உள்ளன. விவசாயம் நன்றாக இந்த மாநிலத்தில் முக்கியமான வளர்க்கபடும் பயிராக, அரிசியுடன், முந்திரி, பாக்கு, மற்றும் தேங்காய் சேர்த்து, இங்கு வளர்க்கப்படுகின்றன கோவாவில் தழைத்தோங்கும் வேறு தொழில், மக்களின் ஆயிரக்கணக்கான வருமானத்திற்கு ஆதாரமாக இருக்கும் மீன்பிடி தொழில் ஆகிறது. மேலும் பூச்சிக்கொல்லிகள், டயர்கள், உரங்கள், காலணி, மருந்துகள், ரசாயனங்கள், எஃகு உருட்டுதல், மீன் பதப்படுத்தல், போன்றவை மாநில பொருளாதாரத்தில் ஒரு பகுதியாக அமைந்துள்ள மற்ற தொழில்கள் ஆகும்.

போக்குவரத்து
கோவா, உலகத்திலுள்ள் எல்லா சுற்றுலா பயணிகளின் கிகவும் விருப்பமான இடமாக இருப்பதால், அது நன்றாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் எங்கு இருந்தும் அடையலாம் தபோலிம் சர்வதேச விமான நிலையம் முழுவதும் சுற்றி காணப்படும் பல உள்நாட்டு ஏர்வேஸ் மற்றும் அத்துடன் சர்வதேச விமானங்கள் உள்ளன. ஒருவர் கோவாவை, மிக அருகிலுருக்கும் மும்பையிலிருந்து அடையலாம். கொங்கன் ரெயில்வேஸ் மாநில்த்தின் குறுக்கே செல்லும் பல ரெயில்களைக் கொண்டிருக்கின்றன, இவை முறையே வடக்கில் மும்பை மற்றும் தெற்கே மங்களூரை இணைக்கின்றன. அது மட்டுமல்ல, கோவாவிலிருந்து நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் ரெயில்கள் இருக்கின்றன. மும்பை, பெங்களூரு, புனே, மங்களூர் மற்றும் பிற மாநிலங்களின் இடங்களுக்கு கோவாவிலிருந்து, அடிக்கடி ஓடும் பஸ் சேவைகள் நிறைய உள்ளன. விரைவான மற்றும் வசதியாக இருக்கும் இந்த பேருந்துகளில் பயணம் விலை அதிகமாக இருக்கலாம் ஆனால் உண்மையில் இரயில்களை விட இவை பிரபலமான விருப்பங்களாலும். போலோ டிராவல்ஸ் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் செயல்பட்டு வரும் மிகவும் நன்கு அறியப்பட்ட பஸ் சேவைகள் ஆகும்.தினமும், பயணிகளின் வசதிக்காக நிறைய பேருந்துகள் மும்பையிலிருந்து மார்கோவா மற்றும் புனாவிற்க்கு செல்கின்றன. நகரத்திற்குள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிக்க பயணிகளுக்கு நிறைய பேருந்துகள், டாக்சிகள், மற்றும் ஆட்டோரிக்ஷாக்கள் இருக்கின்றன. வசதியுள்ள மக்களுக்கு தனியார் கார்கள் பிரபலமான தேர்வாகும். மோட்டார் சைக்கிள் டாக்சிகள் அவை பல்வேறு இடங்களில் மிக உட்புறமாகச் செல்ல முடியும் என்பதால் பரவலாக பிரபலமாக உள்ளன.

சமூகம் மற்றும் பண்பாடு
.கோவா ஒரு பல்வேறு கலாச்சார மாநிலமாகிறது மற்றும் அதன் வளமான கலாச்சார பாரம்பரியம் நாட்டுப்புற இசை, நாட்டுப்புற நடனங்கள், இனிமையான இசை, அற்புத காட்சி கலை, மற்றும் மயக்கும் நாட்டுப்புற கதைகள், பல்வேறு வகைகல் மற்றும் உள்ளடக்கத்தை நிறைய கொண்டுள்ளன என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. போன்றவை தீபாவளி, தசரா, ஹோலி, போன்ற அனைத்து இந்திய திருவிழாக்கள் இங்கே ஆர்வமாகவும்,கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதைத் தவிர, கோவாவை மிகவும் பிரபலமாக்குவது என்ன்வென்றால் இந்தோ-லத்தீன் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள்.. அவர்கள் ரோம் சதுர்னாலியா விழாவுடன் ஒரு ஒற்றுமையை கொண்ட சிக்மோவையும் கொண்டாடுகிறார்கள். சிவராத்திரியும் மிகவும் எளிமை மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. ஜாத்ரா பரவலாக மாநிலக் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கோவாவினரும் ஒரு இசை உணர்வு பிறந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. டல்போட் மற்றும் மண்டோ, கோவாவின் பாரம்பரிய இசை வடிவத்தில் உள்ளன பஜன், கீர்த்தனை மற்றும் நாடக் அத்துடன் மேற்கத்திய செவ்வியல் இசை கூட நன்றாக கோயன்ஸால் ஏற்கப்படுகின்றன. பக்டி, தேஹ்னி போன்ற நடன பாரம்பரிய வடிவம், தசாவதாரா மற்றும் கார்டின்ஹோ, கோயன் மத்தியில் பரவலாக பிரபலமாக உள்ளன. கோவா Tiatre அல்லது தியேட்டர் உலகம் முழுவதும் பிரபலமானது. கிளிஞ்சல்கள், பித்தளை, களிமண் மற்றும் மூங்கில் போன்ற இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு கைவினைப்பொருட்களை கோவாவில் காணலாம். வட்டாரங்களைச் மேலும் தேங்காய் ஓடுகள், மரம், சணல், அரக்கு, கல், துணி, முதலியவற்றால் கைவினைப் பொருட்களை உள்ளுர்வாசிகள் தயார் செய்கின்றனர்.

மொழி
1987 ஆம் ஆண்டு ஆட்சி மொழி சட்டப் படி, மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி கொங்கனி மட்டுமே மற்றும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கையெழுத்து படிவமாக தேவநாகரி இருந்தது. கொங்கனி, பெரும்பான்மையான் இந்திய மொழிகளைப் போன்று இந்தோ-ஆரியர் குடும்பத்தில் இருந்து வந்தது மற்றும் , மதம், பிராந்தியம், சாதி மற்றும் அப்பகுதியின் அடிப்படையில் பல வட்டார பேச்சு வழக்குகள் உள்ளது. சில மக்கள் கொங்கனி கையெழுத்து பிரதியை ரோமன் மாற்ற கோரிக்கை விடுத்தாலும்ம் எனினும், எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை.கோவார் போர்த்துக்கீசியர்களால் ஆட்சி செய்யப் பட்ட போது, அதன் உத்தியோகபூர்வ மொழி போர்த்துக்கல்லாகவே இருந்தது. பழைய தலைமுறையில் இருந்து சில மக்கள் இன்னும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள இந்த மொழியைப் பயன்படுத்துகின்றனர். போர்த்துகீசியம் தான் போர்த்துகல் கலாச்சார செல்வாக்கின் கீழ் பழைய காலனிகளில் தங்கி மக்கள் மத்தியில் தொடர்பு கொள்ளும் மொழி ஆகிறது. அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழி மராத்தி,இது பள்ளிகளில் கூட கற்றுத் தரப்படுகிறது. இது கொங்கனிக்கு பிறகு, பரவலாக இரண்டாவது உத்தியோகபூர்வ மொழியாக ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. நிறைய வெளிநாட்டினர் கோவாவில் ஏரளமாகக் காணப்படுவதால், உள்ளூர்வாசிகள் குறைந்த பட்சம் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளவும், பேசவும் கற்றுக் கொண்டுள்ளனர். சில உள்ளூர் வழிகாட்டிகள் சுற்றுலா பயணிகள், பிரஞ்சு, இத்தாலிய மற்றும் டச்சு போன்ற இடங்களிலிருந்து வருவதால், அவர்களுடன் உரையாக வேண்டும் என்பதற்காக பிற மொழிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தி, அனைத்து கோயன்களால் நன்றாக பேசி மற்றும் புரிந்து கொள்ளப்படுகிறது.. இதைத் தவிர,கன்னடம், உருது, குஜராத்தி, மற்றவே அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களால் பேசப்படுகிறது.

சுற்றுலா
கிழக்கின் முத்து என்று அறியப்படுவது, கோவா, உலகம் முழுவதிலிருந்து வரும் சர்வதேச சுற்றுலா பயணிகளின் மிகவும் பிடித்த இடமாகும். இயற்கையின் அற்புதமான இயற்கை அழகு மற்றும் தேவாலயங்கள், கோயில்களின் கட்டடக்கலை பகட்டு, மற்றும் பழைய வீடுகள் இவையெல்லாம் கோவாவை பயணிகளின் சொர்க்கமாக்க செய்ய பங்களிப்பு செய்துள்ளன..ஒருவர் அன்சுனா, பாம்போலின், கான்டோலிம், டோனா பவுலா, கடற்கரைகளை வடக்கு கோவாவிலும் அல்லது பெனான்லிம்,கொல்வ, மஜோர்டா, பாலோலிம், வார்கா கடற்கரைகளை, தெற்கு கோவாவிலும் சென்று பார்க்கலாம். போண்ட்லா வனவிலங்கு சரணாலயம், மற்றும் கோடிகாவோ வனவிலங்கு சரணாலயம் போன்ற பல வனவிலங்கு சரணாலயங்கள், அல்லது கோவா மாநில அருங்காட்சியகம் கடற்படை விமான அருங்காட்சியகம், தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் உருவப்படம் கேலரி, போன்ற சில அருங்காட்சியகங்கள் போன்றவை, பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. மாநிலததை விட்டுச் செல்லும் முன் பயணிகள் பார்க்க விரும்பும் சில இடங்கள் டிராகோல் கோட்டை அகாடா, கோட்டை போன்ற பல கோட்டைகள் மற்றும் புகழ்பெற்ற செயின்ட் அகஸ்டின் தேவாலயம், பசிலிக்காவின் பிறந்த ஜீசஸ் போன்ற தேவாலயங்கள் சில நன்கு அறியப்பட்ட இடங்கள் உள்ளன. கோவா முடிவே இல்லாத விருந்துகள் மற்றும் திருவிழாக்களுக்கு நன்கு அறியப்பட்டது குறிப்பாக டிசம்பர் மாதம் வரை உச்ச பருவத்தில். கவர்ச்சியான கடற்கரை ஓய்வு விடுதி மற்றும் பட்ஜெட் விடுதிகள் விடுமுறைக்கு பயணிகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை செய்ய முடியும்.

அரசு மற்றும் அரசியல்
அது மாநில அந்தஸ்தை அடைந்து விட்டதிலிருந்து, இந்தியாவின் மற்ற மாநிலங்கள பின்பற்றும் அரசாங்கத்தின் அதே கட்டமைப்பை கோவா, பின்பற்றுகிறது. மாநில அரசாங்கம், 40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒற்றை அவை நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ளது. 1962லிருந்து 1990 வரை, மாநிலத்தின் அரசியல் சூழ்நிலையில் மிகவும் அமைதியாக இருந்தது, எனினும், அதன் பின்னர், அடுத்த 15 ஆண்டுகளில், கோவா மாநிலம் கிட்டத்தட்ட 14 அரசாங்கங்கள் ஆட்சியைக் கண்டுள்ளது. 2005 ல், அப்போதைய கோவாவின் ஆளுநர், சட்டமன்றத்தை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்தார். 2005 ஜூனில், ஒரு இடைத் தேர்தல் நடந்து, காங்கிரஸ் சட்டமன்றத்தில் 5ல் 3 இடங்களில் வெற்றி பெற்றது 2007 சட்டசசபை தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் பெரும்பான்மை பெற்றது மற்றும் மாநிலத்தில் தங்கள் ஆட்சியை உருவாக்கியது. பாஜக காங்கிரசுக்கு எதிரான மேலாதிக்கத்திற்கு போராடிக் கொண்டிருக்கு மற்றொரு வலுவான அரசியல் கட்சி ஆகும். தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஐக்கிய கோயன்ஸ் ஜனநாயகக் கட்சி, மஹாராஷ்டிரவதி கோமண்டக் கட்சி போன்ற பல கட்சிகள் அரசியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும் கட்சிகளாகும்.2012இல் பாஜக , மஹாராஷ்டிரவதி கோமண்டக் கட்சியின் கூட்டணியுடன் அதிகபட்ச இடங்களை வென்றது. கோவாவின் முதலமைச்சர் திரு.மனோகர் பாரிக்கர் மற்றும் H.E. பரத் வீர் வஞ்சோ தற்போதைய மாநில ஆளுநராவார்.

கல்வி
ஆங்கிலம் இந்த மாநிலத்தில் கல்வி கற்பிக்கும் முத்ன்மை மீடயமாகிறது சுமார் 87% கல்வியறிவு விகிதம் கொண்டு, கோவா அரசு அனைத்து தனிநபர்களுக்கும் கல்வியை ஊக்குவிக்கிறது. எல்லா தாலுக்காக்களும் கிராமங்கள் அடஙகியவை, அங்கே குறைந்தது ஒரு அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகள் கோவா வாரியத்தின் இரண்டாம் மற்றும் உயர்நிலைக் கல்வி, அதே போல் ஐசிஎஸ்இ அல்லது Níos குழுவின் கீழ் வருகின்றன. 5 பொறியியல் கல்லூரிகளுடன், கோவாவில் உயர்கல்வியும் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது, அவைகளில் குறிப்பாக, தேசிய தொழில்நுட்பக் கழகம், கோவா பொறியியல் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அதேசமயம் டான் பாஸ்கோ பொறியியல் கல்லூரி மற்றும் பாடிரி கோன்செய்கோ கல்லூரி தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் சில கல்லூரிகளாகும். கோவாவில் மூன்று மருத்துவ நிறுவனங்கள் உள்ளன, அதாவது அரசாங்க நிதியுதவி பெறும் கோவா மருத்துவக் கல்லூரி,மற்றும் சில தனியாரால் நடத்தப் படும் கல்லூரிகள். பிட்ஸ் பிலானி மற்றும் NIT போன்ற நிறுவனங்களின் கிளைகள் இங்கு காணப்படுகின்றன. கோவா பல்கலைக்கழகம் தேலிகோவாவில் அமைந்துள்ள ஒற்றை மாநில பல்கலைக்கழக ஆகிறது, இதன் கீழ், ஆயிரக்கணக்கான கோயன் அதே போல் மற்ற மாநிலங்களில் மாணவர்கள் பொது கல்வி வழங்கும் பல கல்லூரிகள் இயங்குகின்றன. மாநில அரசாங்கத்தின் சரியான கண்காணிப்பின் கீழ். கட்டிடக்கலை, மருந்து, மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள், அதைத் தவிர அறிவியல், வணிகவியல், சட்டம், கலை போன்ற துறைகளை வழங்கும் பல கல்லூரிகள் வெற்றிகரமாக நடத்தப் பட்டு வருகின்றன. தேசிய கடலியல் அறிவியல், NCAOR வாஸ்கோ மற்றும் பனாஜிம்மில் NIO தொடர்பான இரண்டு மையங்கள் உள்ளன. அதே போல் சில நன்கு அறியப்பட்ட பி-ஸ்கூல்ஸ் இங்கே உள்ளன.

கோவாவின் ஹோட்டல்கள்
கோவா பட்ஜெட்டிலிருந்து, இடைப்பட்ட விடுதிகளிலிருந்து, ஆடம்பரமான மேல் விடுதிகள் ட வரை விடுதிகளைப் பெற்றிருக்கிறது. உள்ளூரைச் செர்ந்தவர்களின் பல பங்களாக்களும் வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இடவசதி கோவாவில் கிடைக்கின்றது. சில பிரபலமான தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் மற்றவைகளுக்கிடையில் : பவ்சடா டாமா, போகெய்ன்வில்லே விருந்தினர் மாளிகை,தாஜ் எக்ஸோடிகா கோவா, ஒஷியானிக் ஹோட்டல், அமர்யா ஷாமியானா, தி லீலா கோவா, காச காண்டொலிக், சுர் லா மெர், விவாண்டா தாஜ், - பானாஜி, கிங்க்ஸ்டாக் கடற்கரை விடுதி மற்றும் சந்தான பீச் ரிசார்ட்.

Last Updated on : May 23, 2015