அசாம் வரைபடம்

Assam Map in Tamil

அசாம் வரைபடம்
* முக்கிய சாலைகள், ரெயில்வேஸ், ஆறுகள், தேசிய நெடுஞ்சாலைகள் முதலியவற்றை காட்டும் வரைபடம்
அசாமைப் பற்றி
நீங்கள் எப்போதாவது ஒரு மகிழ்வளிக்கும் விடுமுறை இலக்கில் உங்கள் ஹோட்டல் அறையில் சிறந்த இந்திய தேநீர் பருகுவது போல் கனவு கண்டிருக்கிறீர்கள் என்றால், அசாம் நீங்கள் எப்போதும் தவற விட விரும்பாத ஒரு இடமாகும். இதன் தலைநகரம் கெளஹாத்தியில் அமைந்துள்ள திஸ்பூராகும். அசாம் ஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றாகும் மற்றும் இது மீதமுள்ள சகோதரி மாநிலங்களால் சூழப்பட்டுள்ளது –திரிபுரா, நாகாலாந்து, மேகலயா, மிசோரம், மணிப்பூர் மற்றும் அருணாசல பிரதேசம் – மற்றொரு மாநிலம் மேற்கு வங்காளம். மேலும், வங்காளம் மற்றும் பூட்டான் நாடுகள் இந்த மாநிலத்துடன் சர்வதேச எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இந்த மாநிலம் நிலத்தால் சூழப்பட்டுள்ளது..

இந்த நகரம் காஜிரங்கா தேசிய பூங்கா மற்றும் அங்குள்ள வனவிலங்குகளுக்காக நன்கு அறியப்படுகிறது.மிக முக்கியமாக, இந்த மாநிலம் இன்னும் அழிந்து வரும் இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களை பாதுகாத்து கையாளுகிறது. இந்த மாநிலம், அஸ்ஸாமில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான முயுகா என்றழைக்கப் படும் அஸ்ஸாமி தங்க பட்டுக்காகவும் அறியப்படுகிறது. இந்தியாவின் இதயத்திற்கு அருகே அசாமை நெருங்கிக் கொண்டு வரும் மற்றொரு அம்சம், அதன் முதல் மற்றும் பழமையான பெட்ரோலிய வளங்களாகும்..

நவம்பர் 2013, 18ஆம் தேதியன்று, அசாமின் முதலமைச்சர் தருண் கோகோய், “ஓ மோர் அப்நோர் தேஷ்”(ஓ என் அன்புநிறை நிலமே) என்ற பாடல், அதிகாரப்பூர்வமாக மாநில கீதமாக அங்கீகரிக்கப்டும் என அறிவித்தார், அதவாது,அசாம் ராஜ்யிக் ஜாதியோ சங்கீத். இந்தப் பாடல் இலக்கிய எழுத்தாளர் சத்யரதி லக்ஷ்மிநாத் பெஜ்பரோவாவால் இயற்றப்பட்டது, மற்றும் அரசாங்கத்தின் விழாக்கள் மற்றும் பள்ளி நிகழ்வுகளில் தேசிய கீதத்துடன் இணைந்து பாடப்படுகிறது..

சரித்திரம்
இடைக்கால காலத்தில், அசாம் கொக் மற்றும் அஹோம் ஆகிய இரண்டு வம்சங்களால் ஆளப்பட்டது. கோச் திபெத்திய-பர்மிய வம்சாவளியாக இருந்த போது, அஹோம்கள் தாய் வம்சாவளியக இருந்தது மற்றும் அசாமின் வடக்கை ஆட்சி புரிந்தது. இந்தியா பல படையெடுப்புகளை இந்த நேரத்தில் சந்தித்துள்ளது,, ஆனால் பிரிட்டிஷ் வரும் வரை அசாமை எந்த மேற்கு சக்தியும் ஒருபோதும் ஆட்சி புரிந்ததில்லை. முகலாயர்களும், அஸ்ஸாமின் மீது பதினேழு முறை படையெடுக்க முயற்சி செய்தனர் ஆனால் வெற்றியடையாமல் இருந்தனர். 1826ல், அசாம் முதல் ஆங்கிலோ பர்மியர்கள் போருக்கு பின்னர், கிழக்கு இந்திய கம்பெனி வசம் வந்தது. பின்னர், இறுதியில், மேல் அசாமிற்கு 1833 ல் அதன் ராஜாவாக புரந்தர் சிங்கா கிடைத்தார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு, இந்தப் பகுதி பிரிட்டிஷுடன் இணைக்கப் பட்டது.

புவியியல்
ஜியோமார்பாலஜிஸ்டுகளால் பிரம்மபுத்திரா நதி அசாம் மாநிலத்தின் முந்தைய நதி என்றும், மற்றும் அது உயிர்நாடியாக செயல்படுகிறது என்றும் சுட்டிக காடடப் படுகிறது. இந்த ஆறு அருணாசல பிரதேசத்திலிருந்து இந்த மாநிலத்திற்கு நுழைகிறது. இந்த மாநிலத்தில் நுழைந்த பிறகு, இந்த ஆறு மிகவும் பரந்ததாகி பல கிளை நதிகளை உருவாக்குகிறது. இந்த மாநிலம், பெட்ரோலியம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற வளங்கள் நிறைய பெற்றுள்ளது. இவைகளைத் தவிர, களிமண், காந்த குவார்ட்சைட், பெல்ட்ஸ்பார், சிலிமனைட்ஸ், வெண்ணிற களிமண், போன்ற பல சிறு கனிமங்களுக்காகவும் அறியப்படுகிறது. இந்த மாநிலத்தின் மேற்கு மாவட்டங்கள் ஒரு அற்பமான இரும்பு அளவும் பெற்றுள்ளது. மாநிலங்களில் வடக்கு, 1889 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நன்கு அறியப்பட்ட எரிவாயு மற்றும் பெட்ரோலிய எண்ணெய் இருப்புகள் உள்ளது.

அரசு மற்றும் அரசியல்
அசாம் மாநிலத்தில், 27 நிர்வாக மாவட்டங்கள் உள்ளது. இது மேலும் 49 துணை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன இவை அசாமில் மோகுமா என்று அழைக்கப் படுகின்றன. இந்த மாவட்டங்கள் அந்தந்த தலைமையகத்தால் முறையே மாவட்ட நீதிபதி, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம்,துணை ஆணையர், மாவட்ட நீதிமன்றத்தின் ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும். மாநில மலைகள், ஆறுகள், காடுகளைப் பொறுத்து, மாவட்டங்களின் எல்லைகளை நிர்ணயித்துள்ளனர் .

மாவட்ட பஞ்சாயத்து, மாவட்டத்தின் உள்ளூர் ஆட்சி மற்றும் கிராமப்புறங்களின் பொறுப்பு எடுக்கிறது. எனினும், நகரங்களில் உள்ளூர் நகர்ப்புற உடல்கள் கவனித்துக்கொள்கிறார்கள். மாநிலத்தில் தற்போது சுமார் 26.247 கிராமங்கள் உள்ளன. உள்ளூர் நகர்ப்புற உடல்கள் நகர்-சோமிதி (நகரம் குழு), பொவ்ரோ-சோபா (நகராட்சி) மற்றும் பொவ்ரோ-நிகாம் (முனிசிபல் கார்ப்பரேஷன்) எனப்படும். அசாம் மாநிலத்தில் உள்ள முக்கியமான நகரங்களில் சில கவஹாத்தி, நாகாவ்ன், ஜோற்த் திப்ருகர், ஜோற்த் மற்றும் சில்சார். மாநில வருவாய் இடைவெளியை வைத்து, பிரிக்கப்பட்டுள்ளது வளர்ச்சி திட்டங்களுக்குரிய பகுதியை அடிப்படையாக கொண்டு,. இங்கே 27 மாவட்டங்கள் பிரிக்கப் பட்டுள்ளன.

கல்வி
2011 ஆம் ஆண்டு அசாம் கல்வியறிவு வீதம், பெண்களின் கல்வியறிவு சுமார் 67.27% மற்றும் ஆண்களில் கல்வியறிவு78,81% கொண்டடி, சுமார் 73.18% ஆக இருந்தது. பெரும்பாலான பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் ஆங்கிலம் கற்று.கொடுக்கப் படுகிறார்கள். எனினும், ஒரு சில பள்ளிகளில் அஸ்ஸாமிசும் தங்கள் கல்வி ஊடகமாக பயன்படுத்தப் படுகின்றன. மாநில பள்ளி கல்வி, மற்ற எந்த மாநிலங்களைப் போல் தான், மழலைக் கல்வி முதல், இரண்டாம் மற்றும் மேல்நிலை உட்பட உள்ளது. அசாம் மாணவர்களுக்கு 14 வயது வரை, அரசாங்கத்தால் இலவச கட்டாயக் கல்வி தரப்படுகிறது.அசாம் மாநிலத்தில் அரசு நடத்தும் அத்துடன் தனியார் நடத்தும் பள்ளிகள் இரண்டும் உள்ளன அசாம் தொடக்கக் கல்வி இயக்குனரகம், ஆரம்ப பள்ளி பாடத்திட்டங்களை அமைக்கிறது.. எனினும், மாநிலம், பள்ளிகள் வழங்கும் இரு பள்ளிகளுக்கும் மாநில குழு வின் இணைப்பு (AHSEC) அத்துடன் மத்திய கல்வி வாரியம் இரண்டாம் நிலை கல்வி (சிபிஎஸ்இ)இணைப்பும் உள்ளது.

பொருளாதாரம்
நாட்டின் பெட்ரோலிய தேவைகளை 25% நிறைவேற்றிய போதிலும், மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் இந்தியாவின் அதே அளவில் இருக்க முடியவில்லை. திப்ருகார், மகாராஷ்டிராவின் மும்பைக்கு பிறகு, வருவாய் உருவாக்குவதில் நாட்டின் இரண்டாவது பணக்கார மாவட்டமாக இருக்கிறது. நாட்டின் மற்ற மாநிலங்களைப் போன்று, விவசாயம் மக்களின் முக்கிய தொழில் ஆகிறது. இது அசாமின் வருமானத்தில் மூன்றாவது இடம் வகிக்கிறதி மற்றும் சுமார் 69% மாநில மக்கள், இந்த பணியின் காரணமாக வேலையில் இருக்கிறார்கள். எனினும், அதன் தேநீர் உற்பத்தி மூலம், உலகத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. மேலும், கமேலியா அசாமிகா என அழைக்கப்படும் அஸ்ஸாம் தேயிலை, விலையுயர்ந்த தேநீர் இலைகள் மற்றும் அதன் அருமையான சுவைக்காக அறியப்படுகிறது. விவசாய உற்பத்தியுடன் சேர்த்து, அசாம், இனிப்பு உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், சிட்ரஸ் பழங்கள், கடுகு, மசாலா, அரிசி, மூலிகைகள், சணல், கடுகு, பப்பாளி, வாழை, பாக்கு, கரும்பு, காய்கறிகள், இலை காய்கறிகள், முதலியன உற்பத்தி செய்கிறது

அசாம் சமூகம்
இந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் ஒன்றான அசாம், மனதை மயக்கும் யாராலும் உபயோகப்படுத்தப் படாத வடகிழக்கு பகுதியில் நாட்டின் நுழைவாயிலாக உள்ளது. கம்பீரமான பிரம்மபுத்திரா ஆறு மற்றும்,அற்புதமான மலைகள் மற்றும் அதன் பணக்கார தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுடன், இந்த மாநிலம் ஒரு சுற்றுலா சொர்க்கமாகும். துடிப்பான வாழ்க்கை முறை, அனைத்து புன்னகை மக்கள், மாறுபட்ட, பழங்குடியினர் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பு, ஆகியவை அற்புதமான அசாம் சமூகத்தின் முக்கிய விஷயங்களாகும். அசாம் வரலாறு ஆரியர்களிலிருந்து துவங்குகிறது மற்றும் அதன் குறிப்பு காவியங்கள், தந்திரம், வேதம் மற்றும் புத்த இலக்கியத்திலும் இருக்கிறது.இந்த நிலம் பல வம்சாவளியின் பேரரசர்களால் ஆளப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் மக்கள் மிகவும் நட்புள்ளவர்கள் மற்றும் அவர்கள் வெவ்வேறு பழங்குடியினர் மற்றும் சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருககின்றனர்.

வனவிலங்கு சரணாலயங்கள்
அசாம் மாநிலத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் பலதரப் பட்ட இயற்கை, தாவரங்கள், பறவைகள், விலங்குகள், பலவகைப்பட்ட ஒரு கலவையாக உள்ளன. பொருத்தமான காலநிலை, புவியியல் இடம் மற்றும் பரந்த வனங்களும் அசாம் பறவைகள், விலங்குகள் மற்றும் இயற்கை தாவரங்களுக்கு ஒரு சாதகமான இடமாக செய்துள்ளன. அசாம், என்று பல வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களுக்கு வீடாகவும் மற்றும் அரிதான உலக இனங்கள் சிலவற்றிக்கு இனப் பெருக்க நிலமாகவும் ஆகிறது. அசாமின் பல வனவிலங்கு சரணாலயங்கள், கோல்டன் கரடிக்குரங்குகளிலிருந்து கொம்புள்ள காண்டாமிருகம் வரை பல வனவிலங்குகளுக்கு தங்குமிடம் வழங்குகிறது

மக்கள் தொகையியல் புள்ளி
2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அசாமின் மக்கள் தொக 31,169,272. கடந்த 10 வருடங்களில், இந்த மாநிலம் சுமார் 16.93$ மக்கள் தொகையில் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.2021 மற்றும் 2026 வருடங்களில், இந்த மாநில மக்கள் தொகை முறையே 34.15 மில்லியன் மற்றும் 35.60 மில்லியன் அடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.2011 இல், மாநில கல்வியறிவு 73,18% மற்றும் நகரமயமாக்கல் 12.9% ஆக இருந்தது.

இந்தியாவின் மக்கள் திட்டத்தின் படி, 115 இன குழுக்கள் மாநிலத்தில் உள்ளன. இந்தக் குழுக்களில் 69%, தங்களை பிராந்தியத்தவர் என்று அடையாளப் படுத்துகின்றனர், 19% உள்ளூர் மற்றும் 3% நாடு கடந்தவர்கள். அசாம் நிறைய பழங்குடியினர் மக்கள் தொகையைப் பெற்றுள்ளது. மாநிலம் தற்போது 23 பழங்குடியினரை அறிவித்துள்ளது, அதில் போடோஸ் 40.9% பழங்குடி ஜனத்தொகையிலும், மற்ற மாநிலம் ஜனத்தொக 13% பங்களிக்கிறார்கள்.

கலாச்சாரம்
அசாம் கலாச்சாரம், அகோம் வம்சாவளி மற்றும் கோச் இராச்சியம், அவர்களின் வேர்கள் நிறுவப்பட்ட பின் அதன் பரவலான் செல்வாக்கால் ஏற்பட்டது. கலாச்சார மாற்றத்தில் ஒரு பெரும் பங்காற்றியது ஸ்ரீமந்த ஷங்கர்தேவாவின் (சொங்ககொர்தெவ்) வைணவ இயக்கம் தான். இந்த இயக்கம் அசாமின் கலாச்சாரம்,கலை, நுண்கலை, மொழி மற்றும் இலக்கியம் அடிப்படையில் வளர பெரிதும் உதவியது. அசாம் மொழி பல்வேறு இந்திய மொழிகளில் இருந்து சொற்களை எடுத்து பின்னர் உருவாக்கப்பட்ட பிரஜாவளிi மொழியின், சாயல் உள்ளது. பிரிட்டிஷ் மற்றும் பிந்தைய பிரிட்டிஷ் காலம், அசாம் நவீன கலாச்சாரத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த மாநிலத்தின் இலக்கியம், கலைகளில், வட இந்தியா மற்றும் மேற்கின் ஒரு கலவையைப் பார்க்க முடியும்.. சில புகழ் பெற்ற நடன மற்றும் நாடகங்கள், முதலியன அங்கியா நாட், பிஹூ நடனம், குஷான் நிருத்ரா, பகுரும்பா, பொர்டோய்சிக்லா, சத்ரியா, பஞ்சர் கெகன், மிஷிங் பிஹூ, ஆகியவை சேர்ந்தவை. இசையில், பொர்கீத், போன்ற நாட்டுப்புற இசையுடன் மாநிலத்தில் ஒரு பாரம்பரியம் உள்ளது

மொழி
மாநில உத்தியோகபூர்வ மொழி அஸ்ஸாமி மற்றும் போடோ ஆகும். பெங்காலி ஒரு உத்தியோகபூர்வ அந்தஸ்து வைத்திருக்கிறது மற்றும் ஒரு பேச்சு மொழியாகும். அசாம் மாநிலத்தில் உள்ள வெவ்வேறு சமூகங்கள் பல்வேறு மொழிகளை பேசுகின்றன மற்றும் இந்த மாநிலத்தில் சுமார் 45 பேசப்படும் மொழிகள் உள்ளன. பண்டைய மொழி போடோஎ முன்பு ஒரு பெரிய அளவிற்கு புறக்கணிக்கப்பட்டது , ஆனால் இப்போது மெதுவாக அங்கீகாரம் பெற்று வருகிறது. பரவலாக பேசப்படும் பழங்குடி மொழி, சந்தாலி ஆகும். மேற்கு அசாம் மக்கள், கோல்பரியா அல்லது காமதபுரி என்று அழைக்கப்படும் ராஜ்போங்க்ஷியை பேசுகின்றனர். சிறுபான்மையினர் பாராக் பள்ளத்தாக்கில் பிஷ்னுபிரியா மணைப்புரியும் பேசுகின்றனர். அசாமின் சில பகுதிகளில் நேபாளி பேசும் மக்களையும் பார்க்கலாம்.

அசாம் சுற்றுலா
அசாம், இயற்கை அன்னை தனது ஆசிர்வாதத்தை முழுமையாக பொழிந்துள்ள பூமியாகும்.நாட்டின் வடகிழக்கு பகுதிக்கு நுழைவாயிலான அசாம் மாநிலம், பசுமையான புல்வெளிகள், வளமான சமவெளிகள், மகத்தான பிரம்மபுத்திரா ஆறு, அழகான மலைகள், நீல மலைகள், அழகாக தேயிலை தோட்டங்கள், பணக்கார தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பரிசாகப் பெற்றுள்ளது. அசாம் சுற்றுலாவில் கடந்த ஆண்டுகளில் தழைத்தோங்கியது, இன்னும் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட மகிழ்வளிக்கும் காலநிலை மற்றும் அடர்ந்த காடுகள் உள்ள அற்புதமான வன வளங்கள் இருப்பது,அசாம் சுற்றுலாவிற்கு கூடுதல் நன்மைகள் ஆகிறது. இது புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் மற்றும் சில அரிதான விலங்கு இனங்களுக்கு, வீடாக இருக்கிறது. இவ்வாறு சுற்றுலா பயணிகளுடன் சேர்த்து, அது வனவிலங்கு பிரியர்களுக்கும் பிடித்த இடமாக திகழ்கிறது.

ஊடகம்
அசாம் மாநிலம் ஒருவேளை, நாட்டின் ஒரு முக்கியமான வடகிழ்க்கு மாநிலமாக இருக்கலாம். இது வடகிழக்கு இந்தியாவின் மிக வசதியான நுழைவாயிலாக இருப்பதுடன், சுற்றுலா, விவசாயம் மற்றும், தொழில்கள் அடிப்படையில் மகத்தான முக்கியத்துவம் உள்ளது. இது அரசியல் நடவடிக்கைகளுக்கு சூடான படுக்கையும் ஆகும். ஆண்டு முழுவதும் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை மாநிலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. பல்வேறு கலாச்சார மற்றும் சமூகத்தின் ஏராளமான மக்கள் அசாமில் வசிக்கிறார்கள். இந்தக் காரணிகள் எல்லாம், இந்த மாநிலத்தை ஊடகத்திற்கு மிகவும் விரும்பத் தக்கதாக்குகிறது. அசாம் ஊடகம், அதன் அனைத்து வடிவங்களிலும் தகவல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் சேவை செய்ய வேலை செய்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

போக்குவரத்து
இநத மாநிலம், அத்துடன் பக்கத்து மாநிலங்களில் பஸ் சேவை அசாம் மாநில போக்குவரத்து கழகத்தால் (ASTC) நிர்வகிக்கப்படுகிறது. மாநில அரசு, மாநில குடியிருப்பாளர்களுக்காக சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்தில், சுமார் நான்கு பேருந்துகள் நகாவ்ன் மற்றும் கவுகாத்தி இடையே ஓடின. இறுதியில், நெட்வொர்க் முன்னேற்றம் அடைந்தது மற்றும் ASTCக்கு நல்ல இணைப்பு இருந்தது. வடகிழக்கின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் லோக்ப்ரியா கோபிநாத் பொர்தோலி சர்வதேச விமான நிலையம், முன்னர், கெளஹாத்தியில், போர்ஜார் விமான நிலையம் என்று அழைக்கப்பட்டது. தற்சமயம், வெறும் ஏழு விமான போக்குவரத்துகளே இயங்குகின்றன. ஒருவர் 12 நகரங்களுக்கு இந்த விமான நிலையத்தில் இருந்து இடைநில்லா விமானங்கள் பெற முடியும். சராசரியாக, இந்த விமான நிலையத்திலிருந்து 14 சர்வதேச மற்றும் 315 உள்நாட்டு விமானங்கள் புறப்படுகின்றன.

Last Updated on : May 23, 2015